பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் நக்கீரர் முருகன் திருநாமங்களை அருச்சனை செய்வ தற்கு ஏற்றபடி அடுக்கிக் கூறுகிருர். 'முருகனே இந்த காமங்களேச் சொல்லி நீ வாயாரத் துதிப்பாயாக’ என்று முருகனுக்குரிய நாமங்கள் இருபத்தாறைச் சொல்லுகிருர்* முதலில் முருகனுடைய திருவவதாரத்தை உணர்த்தும் திருப்பெயரைச் சொல்கிருர், கார்த்திகேயன் முருகனுடைய திருவவதாரக் கதை இராமாயணத் திலும் பாரதத்திலும் கந்தபுராணத்திலும் வருகிறது. பரி பாடலில் வருகிறது. தமிழ்க் கந்தபுராணமும் அதை விரி வாகச் சொல்கிறது. அந்தக் கதைகளில் வேறுபாடு இருக் கிறது. முருகன் சரவணப் பூம்பொய்கையில் தோன்றியவன். மிக மிக உயரமான இமயமலையின்மேல் இருப்பது அப் பொய்கை. மக்களுடைய மூச்சுக் காற்றே படாத சிகரத் தில் இருப்பது அது. அங்கே கருப்பை அடர்ந்த பொய்கை யில் முருகன் உதித்தான். சரம் என்பது தருப்பையின் பெயர். அது அடர்ந்த காரணத்தால் சரவணம் என்ற பெயர் அந்தப் பொய்கைக்கு வந்தது. - தருப்பை தூய்மைக்கும் விரதத்துக்கும் கூரிய அறி டிவுக்கும் அடையாளம். இம்மூன்றும் உள்ளவர்களுக்கு இனியவன் முருகன். அதனல் தருப்பைக் குளத்திலே அவதாரம் செய்தான், லேம் என்பது தருப்பைக்கு ஆகு