பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 285: பெயர். நீலப் பைஞ்சுனேயாகிய சரவணப் பொய்கையில் தோன்றியமையால் முருகனுக்குச் சரவணப் பெருமாள், சரவணபவன் என்று திரு.காமங்கள் உண்டாயின. ஷடrர மந்திரமே அந்தத் திருகாமந்தானே? சிவபெருமானுடைய வெளிப்படையான முகங்கள் ஐந்து. இவை நான்கு திசைகளில் கான்கும், மேல்நோக்கி ஒன்றும் உள்ளவை. இவற்றையன்றி மறைவாகக் கீழ் நோக்கிய அதோமுகம் ஒன்று உண்டு. மற்ற முகங்களே வெளிப்படையாக இருப்பதல்ை சிவபெருமானுக்கு ஐம் முகன் என்ற திருநாமம் உண்டாயிற்று. முருகன் திருவவ தாரம் உலகுக்கு இன்றியமையாதது என்பதை அறிந்த சிவபெருமான் அதோமுகத்தையும் வெளிப்படுத்தி ஆறு முக காதகை இருந்து ஒவ்வொரு முகத்திலும் உள்ள கடுக் கண்ணு கிய ஞானக்கண்ணிலிருந்து ஒவ்வொரு பொறியை விட்டான். அந்தப் பொறிகளே உலகம் தாங்காது என்று அஞ்சித தேவர் கடுங்க, இறைவன் ஏவலால் அக்கினி பொறிகளே ஏற்று வாயுவிடம் கொடுக்க, அவன் கொண்டுபோய்க் கங்கையிடம் சேர்த்தான். கங்கை ஆறு பொறிகளையும் சுமந்து சென்று சரவணப் பொய்கையில் உள்ள திட்டில் சேர்த்தது. அங்கே முருகன் திருவவதாரம் செய்தான். முதலில் ஐந்து பூதங்களில் ஒருவகிைய அக்கினி ஏற்று வந்தான்; இறுதியில் சரவணப் பொய்கையை அடைந்தன. பொறிகள். பொறிகள் முருகனை பிறகு கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர் அங்கே வந்தார்கள். முருகனுக்கு அவர்கள் பாலூட்டி அன்பு செய்தார்கள், அக்கினி கொண்டு வந்தமையால் அக்கினி குமாரன் என்றும், கார்த்திகைமாதர் வளர்த்ததல்ை கார்த்திகேயன் என்றும் முருகன் பெயர் பெற்ருன். கார்த்திகைமாதர்கள் தனித்தனியே சீராட்டும் ,