பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருமுருகாற்றுப்படை விளக்கம் ளாகவே பார்க்கிருேம், இலக்கியங்களில் அவர்க ஆளப் பற்றிய வருணனை வரும்போ தெல்லாம் அவர்களுடைய வறிய விலையைப் பற்றிய செய்திகளே வருகின்றன. - ஏழைகளாகிய அவர்கள் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு வள்ளலிடத்தில் பரிசு பெற்ற வேறு ஒருவன் எதிர்ப்படுவான். அவனேக் கண்டு எதிர் வரும் வறிய பாணனே, புலவனே அவனேப் பெரிய செல்வன் என்று: கருதி வணங்கி நிற்பான். வளமான தோற்றத்தோடு வரும் புலவன் தன்னுடைய தோழர்கள் வறிய கிலேயில் இருப் பதைக் கண்டு, 'நானும் உங்களைப்போலத்தான் இருந்தேன். இன்ன செல்வரைச் சென்று அடைந்தேன். என் அறிவுத் திறமையைக் காட்டினேன். அவரால் பரிசு பெற்றேன். நீங்களும் அவரிடம் போனல் சிறந்த பரிசுகளைப் பெறலாம்' என்று சொல்வான். இப்படிச் சொல்லும் வகையில் அமைக் திருப்பதுதான் ஆற்றுப்படை என்ற நூலாகும் ஆறு என்பது வழி. படை என்பது படுத்துதல். செலுத்துதல், வழிகாட்டுதல் என்று பொருள்படும். இப்படி ஆற்றுப்படுத்துகிறவர்கள் கூத்தர், பாணர், பொருகர், விறலியர் என்ற கால்வர் என்று தொல்காப்பியம் சொல் கிறது. இலக்கியங்களேக் கொண்டு புலவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தாம் பெற்ற பெருவளத்தைப் பெருதவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களையும் சென்று: பயன் அடையும்படி சொன்னது ஆற்றுப்படை என்பது தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருள். ஆகவே, ஆற்றுப்படைக்கு மூன்று வகையினர் இன்றி" யமையாதவர்கள். வறியவன் ஒருவன்; பரிசு பெற்றுவரும் ஒருவன் பரிசு தருபவன் ஒருவன். ஆற்றுப்படை பரிசு