பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருமுருகாற்றுப்படை விளக்கம் பொருட்டு முருகன் ஆறு திருமேனி கொண்டான். இவ.ற்றை யெல்லாம் நக்கீரர் சொல்லும் முதல் திருநாமம் கூறுகின்றது. கெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப, அறுவர் பயந்த ஆறமர் செல்வ: (உயர்ந்த பெரிய இமயமலைச் சிகரத்தில் லேகிறமுடைய தருப்பை வளர்ந்த பசிய சுனேயாகிய சரவணப் பூம்பொய்கை யில் ஐந்து பூதங்களின் அதி தெய்வங்களில் ஒருவகிைய அக்கினி தேவன் முதலில் ஏற்றுச் சென்று கொடுக்க, முறையே சென்று தங்கி, ஆறு கார்த்திகை மாதர் பெற்று வளர்த்தவரைப் போலச் சீராட்ட, ஆருகத் தங்கிய அருட் செல்வனே!) இந்திரனுடைய வேண்டுகோளின் படி இறைவன் தன் தேசை அவனிடம் சொடுக்க அதனே அக்கினி தேவனிடம் சந்து அவன் வாயிலாக முனிபத்தினிமார் ஆறு பேர்களாகிய கார்த்திகை மாதர் உட்கொண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றுச் சரவணப் பொய கையில் விட்டனர் என்று ஒரு பழங்கதை உண்டு. அந்தக் கதையை எண்ணி "அறுவர் பயந்த' என்று சொன்னதாகக் கொள்வது ஒரு முறை. முருகன் கார்த்திகை மாதரால் வளர்க்கப்பட்டவன தலின் கார்த்திகேயன் என்ற திருகாமம் உடையவன். கார்த்திகை என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம், ஏழு முனிவர்களின் மனேவிமார் எழு நட்சத்திரங்களாயினர். வசிஷ்டருடைய பத்தினியாகிய அருந்ததி சப்தரிஷி நட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்டருக்கு அருகே நட்சத்திர வடிவில் இருக்கிருள். மற்ற ஆறு முனிவர்களின் மனைவிமாரும் ஒன்ருகிக் கார்த்திகை கட்சத் திரமாக