பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 289 அழைத்துக்கொண்டு சரவணப் பொய்கைக் கரைக்கு வந்தான். அத்தேவியார் ஆர்வத்துடன் ஆறு குழந்தை களையும் ஒருசேர அணைத்தார். அப்போது முருகன் ஒருருவாக இணைந்து ஆறு முகமும் பன்னிரண்டு திருக்கரங் களும் உடைய மூர்த்தி ஆன்ை உமாதேவியார் தம் பாலக் கறந்து ஊட்டினர். அப்படி இணைந்தபோது முருகனுக்குக் கந்தன் என்னும் திருகாமம் அமைந்தது. எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறும் எல்லை முந்து போலஒன் ருகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவும்ஒன் ருகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்' என்று கந்தபுராணம் கூறுகிறது. இவ்வாறு முருகன் பார்வதியம்மையாரின் புதல்வகை விளங்கினன். மால்வரை மலைமகள் மகனே! (பெருமையையுடைய பக்கங்களையுடைய இமயமலையின் மகளாகிய பார்வதியின் புதல்வனே! வரை-மலப் பக்கம்: மூங்கில் வளர்ந்த என்றும் பொருள் கொள்ளலாம்.) பெருமையையுடை 因上 மலையாகிய மலேயரையன் மகளுடைய மகனே' என்று பொருள் எழுதுவர் கச்சினர்க் கினியர். கொற்றவை சிறுவன் திருவவதாரத்தோடு தொடர்புடைய மூன்று திரு காமங்களைச் சொன்னர். மேலே முருகனுடைய வீரத்தை விளக்கும் திருநாமங்கள் இரண்டைக் கூறுகிரு.ர். திரு-19