பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருமுருகாற்றுப்படை விளக்கம் அவனுடைய வீரம் மிகச் சிறந்தது. அவனே எதிர்க்கும் பகைவர்கள் உயிர் பிழைப்பதில்லை. அவர்களுக்கு அவன் யமனப்போல இருக்கிருன் ' நிருதரார்க்கொரு காலா ஜயஜய' என்று திருப்புகழில் பாடுவார் அருணகிரியார். நக்கீரர் அவனே, மாற்றேர் கூற்றே! என்று ஏத்தும்படி சொல்கிருர். பகைவர்களுக்கு யமனப் போன்றவனே என்பது அதன் பொருள். முருகன் புகுந்த போரில் அவனுக்குத்தான் வெற்றி என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அந்தப் பெருமா துடைய அன்னேயே வெற்றியைத் தருபவள். அசுரர் களோடு போரிட்டு வெல்லும் இயல்பினள். அர்த நிலையில் அப் பிராட்டியைக் கொற்றவை என்று கூறுவது மரபு. அவளுடைய பிள்ளே முருகன் என்ருல், தனியே அவனுக்கு வெற்றி உண்டு என்று கூறவேண்டுவதில்து, வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ - (வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய கொற்றவையின் திருமகனே!) கொற்றவையைத் துர்க்கை என்று வடமொழியில் கூறுவர். வீரர்கள் போர்க்களத்தில் கொற்றவையை வழிபடுவார்கள், அந்தப் பெருமாட்டி தமக்கு வெற்றியை வழங்குவாள் என்பது அவர்களுடைய கம்பிக்கை வெல் போர்க் கொற்றவை-தான் வெல்லும் போரை; செய்யும் கொற்றவை என்றது மகிடக்னச் செற்றதன என், , , கொற்றவை என்பதற்கு வனதுர்க்கை என்று பொருள் எழுதுவர் கச்சினர்க்கினியர்.