பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 2.91. பழையோள் குழவி உமாதேவியார் சாந்தமான வடிவும் இயல்பும் உடையவர். துர்க்கையோ இராஜசமும் வீரமும் கொண்ட இயல்பு உடையவள். இருவேறு கிலேயில் விளங்கும் அவ்விருவரும் பராசக்தியின் அம்சங்களே. முருகன் இவ்விருவருக்கும் புதல்வன். இவர்களுக்கெல்லாம் மூலமான பராசக்திக்கே அவன் திருமகன். அவளே எல்லாச் சக்தி உருவங்களுக்கும் மூலமான பழைய சக்தி; மிகமிகப் பழைய பராபரை; இராஜராஜேசுவரி, திரிபுர சுந்தரி என்று தேவியின் பக்தர்கள் கூறும் பராசக்தி அவள். அவள் இழைகளே அணிந்து பேரழகியாகத் திகழ்கிருள். அவ்வாபரணங்கள் தெய்விகம் பொருந்தியவை; இயல் பாகவே அமைந்தவை. முருகன் அந்தப் பேரழகியின் புதல்வன். ஆதலின் அவளுடைய அம்சமாகிய எல்லோருக்கும் புதல்வனகிருன். இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி ! (அணிகலன்களே அணிந்த சிறப்புடைய பழைய வளாகிய பராசக்தியின் குழந்தையே!) அம்பிகையின் திருகாமங்களில் புராதகா என்பதும் ஒன்று. பரீ லலிதா சகசிர நாமத்தில் 802-ஆவது திருகாமமாக ஒளிர்வது அது: பழையவள் என்பது அதற்குப் பொருள். - மலைமகள் மகன், கொற்றவை சிறுவன், பழையோள் குழவி என்னும் மூன்றும் ஒரே கருத்தை மூன்று வகையில் கூறியவை தேவசேனபதி - முருகனுடைய வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பது அவன் குரைேடு செய்த போர், தேவர்கள்.