பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திமுருகாற்றுப்படை விளக்கம், தம் நிலையை இழந்து திண்டாட, அவர்கள் மீட்டும் தங்களுடைய வாழ்வைப் பெறும் பொருட்டு முருகன் போர் செய்தான். அந்தப் போர் எல்லாப் போர்களிலும் பெரிய போர். ஆதலின் அதில் வெற்றி பெற்ற வீரன் எல்லோரிலும் பெரிய வீரன். ஆகையால் முருகன் யாவரினும் சிறந்த வீரன் என்பது தெளிவாகும். இதை, முன்பும் பார்த்தோம். தேவர் படைகளுக்கெல்லாம் தலைவகை இருந்தமையால் அவனுக்குத் தேவசேனபதி என்ற திருகாமம் உண்டாயிற்று. தேவர்களெல்லாம் வணங்கிப் போற்றும் படைத் தலைவன் அவன். அட்போது அவன் வேலாயுதத்தோடு வேறு பல படைக்கலங்களேயும் ஏந்தின்ை. கோதண்டம் ஏந்தும் குமரனாகவும் விளங்கினன். வானேர் வணங்குவில் தானத் தலைவ! (தேவர்கள் வணங்கிய, வில்லே ஏந்திய, படைத். தலைவனே!) இதற்கு, வானேராகிய தானேயையும் வணங்கு வில்லையும் உடைய தலைவ' என்று பொருள் கொள்வர் கச்சினர்க்கினியர். அப்போது வணங்கு வில் என்பதற்கு. வளைந்த வில் என்று பொருள் கொள்ள வேண்டும். முருகன் திருக்கரத்தில் வில்லும் உண்டு என்பதை.. 'சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமும் சூடுதோளும்’ என்னும் திருப்புகழால் உணரலாம். தனுர்த்தர சுப்பிர மணிய மூர்த்தியின் திருவுருவத்தைச் சாய்க்காடு முதலிய. தலங்களில் காணலாம். - -