பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் - 293 மாலை மார்பன் முருகன் வீரவிளையாடலே எப்போதும் செய்து கொண்டி ருப்பதில்லை. தீய சக்திகளைப் போக்கும் பொருட்டு வீரம் காட்டுவானேயன்றி அவன் எப்போதும் ஈரம் உடையவன்; அருளுடையவன். அவன் அணியும் மாலைகளில் வெற்றிக் குரியது வேறு. போகத்துக்குரியது வேறு. அவன் எப் போதும் போகத்துக்குரிய மாலையாகிய கடப்பந்தாரை மார்பில் அணிந்திருக்கிறவன் ஆகையால், அவனே மாலை மார்ப என்று ஏத்துவாயாக’ என்று நக்கீரர் சொல்கிருர். மாலை மார்ப! சரவணபவனே, கார்த்திகேயனே, சிவகுமாரா, பார்வதி கந்தன, துர்க்கா சுதா, பராசக்தி மகனே, தேவசேனபதி, இன்பமாலை யணிவோய் என்று முருகனை ஏத்திப் புகழும்படி இதுவரையில் சொல்லி, மேலும் சில திருகாமங்களேச் சொல்ல வருகிருர் நக்கீரர், - - நூலறி புலவன் தமிழ் நாட்டில் புலவர்களுக்குப் பழங்காலத்தில் மிகுதி யான மதிப்பு இருந்தது. அதற்கு ஏற்ற வகையில் அவர்கள் பண்பிலும் அறிவிலும் சிறந்து கின்ருர்கள். அவர்களுக்கு அறிவின் பெருமையில்ை புலவர் என்று பெயர் அமைந்தது: பண்பின் சிறப்பினுல் சான்ருேர் என்ற பெயர் அமைந்தது. சங்ககாலத்துப் புலவர்களே நல்லிசைச் சான்ருேர் என்று குறிப்பது வழக்கம். மக்களுக்கு அவர்களிடத்தில் அத்தனே மதிப்பு நிலவியது. - சேர சோழ பாண்டியராகிய முடியுடை மன்னர் மூவரு டைய ஆட்சியின்கீழ்த் தமிழ்நாடு இருந்து வந்த பழங்காலத் தில், சில சமயங்களில் அவர்களுக்குள்ளே போர் நிகழும்.