பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 திருமுருகாற்றுப்படை விளக்கம் அப்போது ஒரு நாட்டில் உள்ளோர் மற்ருேர் காட்டுக்குப் போக மாட்டார்கள். போனல் ஒற்றரென்று பற்றிக் கொள்வார்கள். ஆயினும் புலவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானலும், எந்த ஊர்க்காரர்களானலும் எங்கும் போகலாம். அவர்கள் பிறந்தது ஒரு நாடானலும் ஓர் ஊரானலும் எல்லா நாடுகளும் எல்லா ஊர்களும் அவர் களுக்கு உரியனவே ஆகும். இந்தக் காலத்தில் ஒரு காட்டார் வேற்று காடுகளுக்குப் போக வேண்டுமானல் அதற்கு அது. மதிச்சீட்டு வாங்க வேண்டும். புறப்படும் காட்டு அரசிய லாரும் அநுமதி வழங்க வேண்டும். போய்ச் சேரும் காட்டு அரசியலாரும் அநுமதி தரவேண்டும். இல்லையானல் போக் இயலாது. அந்த இரண்டு அநுமதிகளும் எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் இடம், காலம் என்ற வரையறை இருக்கும். இன்ன காட்டுக்குத் தான் போகலாம், இவ்வளவு காலமே தங்கலாம் என்று வரையறுத்து அநுமதி அளிப்பார்கள். எல்லா நாடுகளுக்கும் எப்போதும் போகும் அநுமதி எவருக்கும் கிடைப்பது: இல்லே. பழங் காலத்தில் இந்த காட்டில் எல்லா இடங்களுக்கும் எல்லாக் காலங்களிலும் செல்வதற்குரிய தகுதியை ஒருவன் முயன்று பெறலாம். அது அரசியலாரிடம் பெறுவதன்று. தானே முயன்று அமைத்துக்கொள்வது. அதுவே புலமை. ஒருவன் கல்வியிற் சிறந்தவனனுல் எந்த நாட்டுக்கும் போகலாம்; எந்த ஊருக்கும் போகலாம். அந்த காட்டி னிலே தங்கிவிடலாம்; அந்த ஊர்க்காரனே ஆகி விடலாம். இதையே வள்ளுவர் சொல்லுகிருர், 'யாதானும் நாடாமல்; ஊராமால், என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு’’ என்பது இந்தக் கருத்தைச் சொல்கிறது.