பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 295 புலவர்கள் தம்முடைய கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங் களால் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு அடைவார்கள். புலவர்களைத் தெய்வம் போலவே எண்ணி மக்கள் வழி பட்டார்கள். கடைச் சங்கத்தில் இருந்த புலவர்களேக் கலே மகளின் அவதாரமாகவே கருதினர். அப்படியே புராணம் கூறுகிறது. - அதுமட்டும் அன்று. சங்கப் புலவர்களில் தெய்வங் களும் இருந்து தமிழுக்குச் சிறப்பை அளித்ததாக இறையன ரகப்பொருள் உரையில் வருகிறது. திரிபுர மெfத்த விரி சடைக் கடவுளும், குன்ற மெறிந்த குமர வேளும், வாசு தேவனும் தலைச்சங்கத்தில் புலவர்களாக விளங்கினர் களாம். குமரகுருபரர் முருகனே, 'சங்கத் தமிழின் தலைமைப் புவவா' என்று பாடுகிரு.ர். கடவுளரையும் புலவர்களாகச் சொல் வதில் பெருமை காணுபவர்கள் இங்காட்டினர் என்பதை இவை காட்டுகின்றன. முருகன் ஞான பண்டிதன்; எல்லாம் அறிந்த சர்வக்ஞன். எல்லா மொழிகளும் அவன் அருளால் தோன்றியவை. வேதத்தை அருளியவன். பிரணவப் பொருளே உபதேசித் தவன். அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கண இலக்கி யங்களை அறிவுறுத்தியவன். - 'சிவனை நிகர் பொதியவரை முனிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே!" என்று அருணகிரியார் பாடுகிருர். தென்னுட்டுக்கு வந்த போது சிவபிரானிடம் தமிழைக் கற்றுத் தமிழ் பேசும் ஆற்றலும் தமிழறிவும் வன்மையும் உடையவரான அகத் தியர், இங்கே வந்த பிறகு முருகனிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைச் சிக்கற ஓதிப் பெரும் புலவரானர்; பன்னிரண்டு மாளுக்கர்களுக்குத் தமிழ் கற்பிக்கவல்ல