பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 17 தருபவனுடைய பெருமையைச் சொல்வது; பாடுகி ம புலவன் கூத்தனே. புலவனே, பாணனே பரிசுபெற வழி காட்டும் வகையில் பாடுவான். - ஆற்றுப்படை திருமுருகாற்றப்படை என்ற நூல் புலவர் ஆற்றப் படை வகையைச் சார்ந்தது. பாணனுக்கு வழிகாட்டுவது பாணுற்றுப்படை என்றும், கூத்தருக்கு வழிகாட்டினல் கூத்தராற்றுப்படை என்றும், விறலியர், பொருநர் ஆகிய வர்களுக்கு வழிகாட்டினல் விறலியாற்றுப்படை, பொருள் ஆற்றுப்படை என்றும் பெயர் பெறும். புலவரை ஆற்றுப் படுத்தும் நாலுக்குப் புலவர் ஆற்றுப்படை என்று பெயர். பத்துப்பாட்டில் தனி நூல்களாக உள்ள ஆற்றுப் படைகளே யன்றி புறநானூற்றில் சில பாடல்கள் ஆற்றுப் படைகளாக அமைந்துள்ளன. பிற்காலத்தில் கச்சியப்ப முனிவர் திருத்தணிகை ஆற்றுப்படை என்ற நூலைச் செய் திருக்கிருர். ஏட்டுச் சுவடியில் பாணுற்றுப் படை என்ற நூல் ஒன்று உண்டென்று மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயர் அவர்கள் எழுதியிருக்கிருர்கள். பிற்காலத்தில் ஆற்றுப் படை பாடும் வழக்கம் குறைந்து விட்டது. ஆதலின் மிகச் சில ஆற்றுப்படைகளே உள்ளன. பெரும்பாலும் யார் பயன்பெற முயல்கிருர்களோ அவர்கள் பெயரால் ஆற்றுப்படைக்குப் பெயரிடுவது வழக்கம். பாணனுக்கு வழிகாட்டினல் பாணுற்றுப்படை யாகும். புலவருக்குக் கூறுவது புலவராற்றுப்படை திருமுருகாற்றுப்படைக்கு அந்த முறையில் பெயர் சொல்வ தால்ை புல்வராற்றுப்படை என்றே சொல்லவேண்டும். திரு-2