பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 திருமுருகாற்றுப்படை விளக்கம் பேராசிரியரானர். அகத்தியம் என்னும் முத்தமிழ் இலக்க ணத்தை இயற்றும் அறிவாற்றல் அவருக்கு உண்டாயிற்று 'குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே' என்பதையும் காண்க. இவ்வாறு பெரும் புலவர்களே உண்டாக்கும் அரும் பெரும்புலவகிைய முருகனே வெவ்வேறு திருகாமங்களால் பாராட்ட வந்த நக்கீரர், அவனைப் புலவனுகவும் வைத்துப் போற்றுகிருர். தமிழ்நூற் புலவன் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களேயும் அறியும் ஞானச் செல்வன் என்று பொருள் கொள்ளும்படி ஒரு திருகாமத்தைச் சொல்கிருர், நூல்அறி புலவ! என்பதே அது. எல்லா நூல்களையும் அறிந்த பேரறி வாளனே' என்பது இத்தொடரின் பொருள். கச்சினர்க் கினியர், எல்லா நூல்களேயும் அறியும் அறிவுடையவனே என்றே பொருள் எழுதி யிருக்கிருர். வேறு உரையொன்று. வேதாகமங்கள் முதலிய சாத்திரங்களே ஒதாதுணர்த்தும் பண்டிதனே' எனறு விளக்குகிறது. புலவரிற் சிறந்த ாக்கீரர் முருகனையும் புலவகைப் போற்றிப் பெருமிதம் அடைவதில் வியப்பு ஏதும் இல்லே. இலக்கண உரையை அறிந்தவன் நூலறி புலவ' என்பதை நக்கீரர் தம் வாழ்க்கையில் பெற்ற அதுபவம் ஒன்றை உளங்கொண்டு சொன்ன தாகச் சொல்லவும் இடம் உண்டு, நூல் என்பதற்கு இலக்கணம் என்று பொருள் கொள்வது பழைய வழக்கம். "முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி" என்ற