பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிருநாமங்கள் 297 தொல்காப்பியப் பாயிரத்தில், நூல் என்ற சொல் இலக் கணத்தையே குறிக்கிறது. "நூலே உரையே' என்று வரும் தொல்காப்பியச் சூத்திரத்திலும் அந்தப் பொருளில் நூல் என்ற சொல் அமைந்திருக்கிறது. இலக்கணத்தில் உள்ள குத்திரங்களுக்கு நூற்பா என்ற பெயர் வந்ததற் கும் இதுவே காரணம். இலக்கணம் அறிந்த புலவன் மற்றவர்களிலும் சிறர் தவன், இலக்கணத்தாற் செப்பம் அமைந்த மொழி சீரிய மொழி. "மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?” என்று திருவிளையாடற் புராணம் தமிழின் சிறப்பை எடுத் துரைக்கிறது. கடவுளரே இலக்கண நூல்களே இயற்றியதாகவும் அறிவுறுத்தியதாகவும் வரலாறுகள் வழங்குகின்றன. இறைவனுடைய உடுக்கையிலிருந்து பிறந்த ஒலிகளே மாகேசுவர சூத்திரங்களாயின என்பர். வடமொழியில் முருகன் அருளிய கெளமார வியாகரணம் என்ற நூல் ஒன்று உண்டு என்று கூறுவர். தமிழில் ஆலவாய் இறைவன் அருளிய அகப்பொருள் இலக்கணம் இறையஞர் அகப் பொருள் என்ற பெயரோடு இன்றும் நிலவுகிறது. முருகன் தமிழ் இலக்கண நூல் ஏதும் இயற்றியதாகத் தெரிய வில்லே. ஆயினும் இலக்கண உரையை மதிப்பிட்டவன் என்று ஒரு வரலாறு உண்டு. அது வருமாறு: ஒரு சமயம் பாண்டி காட்டில் பஞ்சம் உண்டாகிப் பன்னிரண்டாண்டுகள் இருந்தது. பஞ்சம் உண்டானவுடன் பாண்டியன் மிக வருந்தனன்; குடி மக்கள் அல்லலுற நேருமே என்று அஞ்சினன். அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஆனல் சங்கப் புலவர்கள் பஞ்சத்தில் துன்புறக்