பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 - திருமுருகாற்றுப்படை விளக்கம் இலக்கண குத்திரங்களுக்கு உரை எழுதினுல்தான் பொருள் புலப்படும். ஆகவே அந்த நூலுக்கு உரை எழுதச் செய்யவேண்டுமென்று கிக்னத்த அரசன் தமிழ்ச் சங்கப் புலவர்களிடம் அளித்து உரை வகுக்கச் சொன்னன். சங்கத்தில் இருந்த காற்பத்தொன்பது புலவர்களும் தனித் தனியே ஆராய்ந்து உரை எழுதி முடித்தார்கள். காற்பத் தொன்பது உரைகள் வந்து விட்டன. அவற்றில் எதைக் கொள்வது. எதைத் தள்ளுவது? காற்பத்தொன்பதையும் வைத்துக் கொண்டால் பெரிய போராட்டம் அல்லவா எழுந்துவிடும்? R தமிழ் நாட்டின் தலை சிறந்த புலவர்களாகிய காற்பத் தொன்பது பேர் எழுதியவற்றின் தரத்தைத் தீர்மானித்து இதுதான் சிறந்தது என்று சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது? யார் சொல்லத் துணிவார்கள்? நூல் இல்லையே என்று கவலைப்பட்ட பாண்டியனுக்கு இப் போது உரைகள் இத்தனே வந்து விட்டனவே என்ற கவலே உண்டாகி விட்டது. இகதச் சிக்கலை எப்படித் தீர்ப்பது? மறுபடியும் ஆலவாய் இறைவனேயே புகலடைக் தான் பாண்டியன். 'எம்பெருமானே! இவ்வளவு உரை களில் யாருடையது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறம் தெரியாமல் கலங்குகிறேன். நீயே ஒரு வழியை அருளிச் செய்யவேண்டும்' என்று கூறிப் போற்றினன். அப் போது அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. "இவ்வூரில் வணிகர் தெருவில் உப்பூரிகுடிகிழார் மரபில் உருத்திர ஜன்மன் என்ற Loair&r தோன்றியிருக்கிருன். ஐந்தாண்டு கிரம்பியவன். அவன் ஊமைப்பிள்ளை. முருகனுடைய அம்சம் உடையவன். அவனே அழைத்து வந்து ஆடையணி புனைந்து உயரிய ஆசனத்தில் இருத்திப் புலவர்களுடைய உரைகளே வாசிக்கச் சொல்.