பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 திருமுருகாற்றுப்படை விளக்கம் புலப்படுத்தினன். இவ்வாறு இலக்கணத்தை அறிந்து தெளிவுறுத்தியதை எண்ணியே திருமுருகாற்றுப் படையில், நூலறி புலவ! என்று அமைத்ததாகச் சொல்வதும் பொருத்தமாக இருக்கும். பெரு வீரன் உலகில் நமக்கு வரும் இடர்ப்பாடுகளைக் களைய வேண்டு மால்ை நமக்குத் துணிவு இருக்க வேண்டும். இடர்களே எதிர்த்து கின்று வெல்வதற்கு அடிப்படையானது வீர உணர்ச்சி. உள்ளத்தில் வீரம் இல்லாதவன் எவ்வளவு பக்க பலம் உடையவகை இருந்தாலும் செயலில் வெற்றி பெறமாட்டான். புறப்பகையை வெல்வதற்கு மிடலாகிய வீரமும் அகப் பகையை வெல்வதற்கு அறிவாகிய வீரமும் வேண்டும். . - முருகன் தன் அன்பர்களுக்கு வரும் இடையூறுகளைப் போக்கி அவர்களைப் பாதுகாப்பவன். இயற்கையாகவே கோயில்வா யாக்கையும் வலிமையும் உள்ள தேவர்கள் மகா .வீரர்கள். அவர்களே அஞ்சும்படி அவர்களிலும் மிக்க வலிமையோடு இருந்தான் சூரபன்மன். அவனே எதிர்த்து வெல்லும் துணிவு அவர்களுக்கு உண்டாகவில்லை. முருக னிடம் புகலடைந்தபோது அவன் ஒருவனே அவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரை கடத்தின்ை. போரில் அமரர் களும் கலந்து கொண்டார்கள், முருகன் ஒருவன்தான். அத்தனை பேருக்கும் ஊக்கம் அளித்தான். தேவாசுர யுத்தம் மூண்டது. அதில் முருகன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி வின்று வீசம் காட்டினன். அவனுடைய சிறப்பான .வீரம் அந்தச் செருவில் கன்ருகப் புலப்பட்டது. வேறு யாரும் உவமை கூறமுடியாமல் ஒரு தனி வீரனுக வின்ருன்.