பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 . திருமுருகாற்றுப்படை விளக்கம் கிருர்கள் கருவூலத்தைப் பாதுகாக்கும் காவலன் அந்தக் கருவூலம் தனககே உரியது என்று எண்ணமாட்டான். அதைக் காவல் புரிவதல்ை பலருக்கும் பயன்படும் பொருள். தக்கபடி பயன் அளிக்க வகை உண்டாகிறது. வேதத்தை அடிப்படை நூலாகக் கொண்டது இந்து சமயம். இந்து மதம் என்பது புதிய பெயர். இதன் பழம் பெயர் வைதிக சமயம் என்பது. சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம், செளரம் என்ற வழிபாடுகளும், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாக்தம் முதலிய சமய நெறிகளு வேறு வேருக இருந்தாலும் எல்லாவற்றிற். கும் பொதுவான நூலாக நிலவுவது வேதம். ஆதலால் சமய நெறிகள் குறைபாடின்றி கிலவ வேண்டுமானல் வேதத்தைக் காப்பாற்றல் அவசியம். அப்படியே வேள்வி யில்ை உலகத்துக்கே வளவாழ்வு உண்டாகிறது. ஆதலின் வேதத்தையும் வேள்வியையும் இந்து மதத்தைச் சார்ந்த பல சமயத்தின ரும் போற்றி வந்தனர். வேததெறிக்குப் புறம்பான அவைதிகர்கள் அவற்றை ஏற்ப தில்லை. ஞானசம்பந்தர் சைனர்களோடு வாது செய்யப் போகும்பொழுது ஆலவாய் இறைவனிடம் இசைவு வேண்டிப் பாடுகிருர். "வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமனெடு தேரரை வாது செய்தழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுடன் ஆய பரமனே’’ என்று கேட்கிருர், வேதமும் வேள்வியும் கமக்கு இன்றியமை. யாதவை. அவற்றை மறுத்து கிந்தனை செய்து உழன்றனர். அக்காலத்தில் பாண்டி காட்டில் இருந்த சைனர்கள். அந்த விலையை மாற்றப் புகுந்தார் ஞானசம்பந்தப் பெருமான்,