பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 305 எனவே, அந்த இரண்டையும் காப்பாற்றும் அந்தணர் களேச் சமுதாயம் முழுவதும் மதித்துப் போற்றி வந்தது. அந்தத் தொழிலைச் செய்வதற்கு அவர்களுக்கு வலிமை வேண்டுமே! பணக்காரன் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு பலரைக் காப்பாற்றுகிருன். அந்தணர்களும் ஒரு செல்வத்தைக் கொண்டே வேதத்தையும் வேள்வியை யும் பாதுகாக கிருர்கள். அந்தச் செல்வம் எது? முருகனே அவர்களுக்குச் செல்வமாக இருக்கிருன். ஆகவே, அக்தணர் வெறுக்கை: என்று போற்றி வாழ்த்தச் சொல்கிருர் நக்கீரர். வெறுக்கை-செல்வம். இந்தத் தொடரை நினைந்தே அருணகிரிநாதரும் திருவகுப்பில், 'வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும்' என்று பாடியிருக்கிருர், அந்தணுளர்களிடம் முருகன் அன்புடையவன் என்பதை, அவனுடைய திருநாமங்களில் ஒன்ருகிய, "ட்ராஹ்மனப்ரிய:' என்பது விளக்கும் அறிஞர் போற்றுபவன் - உலகத்தில் பணம் படைத்தவரினும் பலம் படைத்த வரினும் பதவி படைத்தவரினும் அறிவு படைத்தவரே சிறந்தவர்கள். பொருள்களின் தகுதியை அறிந்து மதிக்கும் ஆற்றல் அறிவுடையவர்களுக்கே உண்டு. அறிஞர்களிலும் பல வகையினர் உண்டு. ஒரு துறையில் வல்ல அறிஞர்கள் மற்றத் துறைகளில் உள்ளவற்றை அறியாட்டார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும் பற்றி அறிந்தவர்கள் இருக்கிருர்கள், இன்டம் அறித்தவாகளினும் பொருள் திரு-20