பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 - திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் சில உரையாசிரியர்கள் இதை அவ்வாறே குறித்திருக் கிருர்கள் நக்கீரர் 'முருகனைக் காணவேண்டும். கண்டு பயன்பெற வேண்டும்" என்ற ஆர்வம் உடைய புலவன் ஒருவன் இருக் கின்ருன். அந்தப் பெருமானுடைய அருளைப் பெற்ற மற்ருெரு புலவர் அவனைக் கண்டு, இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும். அவன் திருவருளேயும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை. இதனைப் பாடியவர் நக்கீரர் என்னும் பெரும் புலவர். அவரை மதுரைக் கணக்காயனர் மகனர் நக்கீரனர் என்று வழங்குவது பழைய மரபு. நக்கீரருடைய தந்தையும் பெரும் புலவர். அவர் மதுரை மாாகரத்தில் பெரிய ஆசிரியராக இருந்தவர். கணக்காயனர் என்பது ஆசிரியருக்குப் பெயர். அவருடைய இயற் பெயர் இன்னது என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் ஆசிரியர்களுக்குப் பெரு மதிப்பு வைத்து அவர்க ளுடைய இயற் பெயரைச் சொல்லாமல் ஆசிரியர் என்றே சொன்னர்கள். "ஊரைச் சொன்னலும் பேரைச் சொல்லக் கூடாது' என்பது இந்த மரியாதை பற்றி எழுந்த பழமொழி. ஆகையால் மதுரைக் கணக்காயனருடைய பேரைச் சொல்லாமல் ஊரைச் சொன்னர்கள், மதுரையில் இருந்த ஆசிரியர் என்ற அளவில்தான் அவரைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்கிருேம். o அவருடைய திருப்புதல்வர் நக்கீரர். புல்வருடைய பிள்ளே புலவராகவே இருப்பது அரிது. ஒரளவு அறிவு பெறலாமேயன்றி நூல்களை இயற்றும் புலமை எல்லாப்