பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருமுருகாற்றுப்படை விளக்கம் அறிந்தவர்கள் சிறந்தவர்கள். அவர்களினும் அறத்துறை அறிக்கோர் சிறந்தோர். வீட்டுநெறி அறிந்தவர்கள் எல்லாரினும் சிறந்தவர்கள். உண்மை அறிஞர் அவர்களே. அவர்களேயே ஞானியர் என்று கூறுவர். அவர்கள் பரம் பொருளே அறிந்தவர்கள். எல்லாப் பொருள்களினும் மேற்பட்டது பரம்பொருள். ஆகவே அதனே அறிந்தவர்கள் பிற பொருள்களே அறிந்தவர் யாவரையும் விட மேலான வர்கள். அவர்களிடம் இருப்பது பரஞானம். அத்தகைய பேரறிவாளர்கள் முருகனே அறிந்து புகழ் கிருர்கள். அவர்கள் புகழ்கின்ற செற்கள் மலேமலையாகக் குவிகின்றன. அந்தக் குவியல்மயமாக இருக்கிருன் முருகன். அறிந்தோர் சொல்மலை! [ மெய்யுணர்ந்தவர்களுடைய சொற்களெல்லாம் தொக்க தொகுதியாக விளங்குபவனேl) சொற்கள் சிறிதும் தளராமல், தம் பொருளில் மாருமல் ஈட்டமாக இருப்பதால் மலேயென்ருர். அறிந்தோர் சொற்களால் புகழ்பெறும் மலேபோன்றவனே என்றும் பொருள் கொள்ளலாம். 'சான்ருேர் புகழ்ந்து சொல்லப் படும் சொற்களின் சட்டமாயிருப்பாய்' என்பது கச்சினர்க்கினியர் உரை. ஆடவரிற் சிறந்தோன் ஆடவர்கள் வீரம் பொருந்தியவர்களாக இருந்தால் அவர்களை மகளிர் விரும்புவார்கள். தோளாண்மையில்ை மங்கையர் மனத்தைக் கவர்வது வீரர் திறம்.

  • மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும்

தடந்தோளான் ' என்பது களவெண்பா. ஆண் மக்களுக்கு இன்றியமை