பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 307 யாதது வீரம், ஆண்களின் தன்மை என்னும் சொற் பொருளுடைய ஆண்மை என்ற சொல் வீரத்தைக் குறிப்பதல்ை இது பெறப்படும். பெண்மை என்பது விருப்பம் என்ற பொருளுடையது. பெட்பு, மாதர் என்ற சொற்களுக்கு விருப்பம் அல்லது காதல் என்று பொருள். ஆண்மையை விரும்புவது பெண்மை; வீரத்தை விரும்புவது பெண்மை. வீர உருவமாக இருப்பவன் ஆடவன். அக்க வீரத்தை விரும்பும் வேட்கையின் உருவமாக இருப்பவள் பெண். முருகன் மகளிர் விரும்பும் கணவனக இருக்கிருன்: காரணம் அவன் சிறந்த ஆண்மையை உடையவர்களில் சிறந்தவகை இருத்தல். தெய்வயானை, வள்ளி நாயகி என்னும் இருவருக்கும் கணவகை விளங்கும் முருகன், வலியுடைய மைந்தர் களுக்குள் சிங்கம்போல விளங்குகிருன். மங்கையர் கணவ: மைக்தர் ஏறே! மைங்தை உடையவர் மைந்தர். ைமந்து-வலிமை. ஏறு என்பதற்கு இடபம் என்று பொருள் கூறுவர் கச்சிர்ைக் கினியர்.' - - ஆண்மகன் சமுதாயத்தில் பீடு கடை போட்டு உலவ வேண்டுமானல் அவனுடைய மனேவி கற்பிற் சிறந்தவளாக இருக்க வேண்டும். " புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை, இகழ்வார்முன் ஏறுபோற் பீடு நடை ' என்பது திருக்குறள். சிறந்த மங்கையர் இருவருக்குக் கணவகை இருக்கும் சிறப்பினால், ஏனய மைக்தர்களே விடச் சிறப்பாக மிடுக்கு கடை போடும் ஏறு போல இருக்கிருன் முருகன். அதனைக் கருதி இவ்விரண்டையும் இணைத்துச் சொன்னர் என்றும் கூறலாம்.