பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 309 செல்வத்தை ஈட்டுவது மட்டும் செல்வருக்கு அழகு அன்று; அதைப் பிறருக்கு வழங்கும்போதுதான் அவர் உண்மையான செல்வராகிருர்; பலரும் அறியும் செல்வ ராகிருர். முருகன் அத்தகைய செல்வன். > வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! (வேல் பொருந்திய பெரிய கைகளால் அமைக்க பெரிய செல்வத்தை உடையவனே!) என்றது வேல் வெற்றியாற் பெற்ற அச்செல் வத்தை' என்று விளக்கம் எழுதுவார் கச்சினர்க்கினியர். .சாலுதல்-கிறைதல். செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! அக்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை! மங்கையர் கணவ மைந்தர் ஏறே! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ செல்வl என்று போற்றிப் பாராட்டும்படி எதிர்ப்பட்ட புலவனுக்கு உபதேசம் செய்கிருர் நக்கீரர், குன்றம் எறிந்தவன் பழைய காலத்து உரையாசிரியர்கள் சில தொடர்களே வழக்கமாகச் சொல்வார்கள், முருகனைக் குறிக்கும்போது "குன்றம் எறிந்த குமரவேள்' என்று சொல்வார்கள். இறையனாகப் பொருள் உரையில் தலைச் சங்கத்தில் இன்னர் இன்னர் புலவர்களாக இருந்து தமிழ் ஆாய்க் தார்கள் என்று சொல்லுமிடத்தில். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும்' என்று வருகிறது. குன்றம் என்றது மலே வடிவத்தில் கின்ற கிரவுஞ்சாசுரனே. முருகன் தன் வேலால் அந்த மலேயைப் பொடிப்பொடி ஆக்கினன். அது அவனுடைய வெற்றிக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அது