பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 10 திருமுருகாற்றுப்படை விளக்கம்: புலவர்கள் போற்றும் வகையில் என்றும் குன்ருத: கொற்றமாக கிலவுகிறது. - கிரவுஞ்சம் என்பது அன்றிற் பறவையின் பெயர். ஆணும் பெண்ணும் பிரியாமல் எப்போதும் இரட்டை யாகவே இருக்கும் இயல்புடையவை அப்பறவைகள்: கிரவுஞ்ச மிதுனம் என்பார்கள், சிறந்த காதலர்களின் அன்புக்கு அன்றிலிணையை உவமை சொல்வது புலவர் களின் வழக்கம். அன்புக்கு அறிகுறியாக இருக்கும் அன்றிலின் உருவத்தில் இருந்த அசுரன் கொடுமை. செய்தான். பொல்லாதவர்கள் நல்லவர்கள் போலத் தோற்றம் கொண்டு, பிறரை ஏமாற்றிக் கொடுமை செய்வார்கள். இந்த இயல்பைக் கிரவுஞ்சாசுரன் கொண் டிருந்தான். அன்றில் வடிவில் மலேயாக இருந்த அவன் எங்கும் பறந்தான், திடீரென்று ஓரிடத்தில் வந்து படிவான். அடியில் இருந்த மக்களும் பிறரும் நசுங்கி மாய்வார்கள், சிவபெருமான் பறக்கும் மூன்று புரங்களே அட்டார். பறந்து சென்று படிந்து கின்று உலகுக்குத் துன்பத்தைத் தந்த கிரவுஞ்சலேயை முருகன் அட்டான். பழைய நூல்களில் கிரவுஞ்சமலையைப் பற்றிய, செய்தி வேறு வகையாக இருக்கிறது. சூரன் கிரவுஞ்ச மலேக்குள்ளே புகுந்து கொண்டு எங்கும் திரிந்தானம். அம் மலே அவனுக்குக் கவசம் போல இருந்ததாம். அம்மலையையும் சூரனேயும் ஒரே சமயத்தில் ஊடுருவிச் செல்லும்படி முருகன் தன் வேலை ஏவினம்ை. 'ஒருதோகை மிசைஏறி உழல்சூரும் மலைமார்பும் உடன் ஊடறப் - பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம்' - என்று ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகிருர், அதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், 'குர