பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 311 பன்மாவுக்கு மறைவாய் ஒடி வரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரே காலத்தில் ஊடுருவும்படி வேலேறுட்டப் பொருதருளி என்று எழுது கிருர். "கிளேபட் டெழுகு ருரமும் கிரியும், தொளை பட் டுருவத் தொடுவே லவனே' என்ற அநுபூதிப் பாட்டில், கிரவுஞ்ச மலையையும் சூரன் மார்பையும் ஒருங்கே தொ8ளத்து அழித்த வேலின் பெருமையை அருணகிரி காதரும் கூறுகிருர், - முருகன் மலைக்குத் தலைவன்; முதல் திணையாகிய குறிஞ்சிக்குத் தலைவன். அதற்கு அவனே உரிமையாளன். விண்ணேத் தொட்டு கிமிர்ந்துள்ள மலைகளிலெல்லாம் அவன் கோயில் கொண்டுள்ளான். கோயில் இருப்பினும் இல்லையாயினும் அவனுடைய உரிமை போகாது. இதைப் பற்றி முன்பே பார்த்தோம். குன்றங்களுக்குத் தலைவகை இருந்தாலும் கிரவுஞ்சமாகிய குன்றத்தை அழித்தான். தவறு செய்தால் அவன் யாரானலும், எப்படித் தோற்றி லுைம் அவனே ஒறுப்பது தலைவன் கடமை. ஆகவே, மலைகளுக்கு உரியவகை இருக்கும் முருகன். இது மலேயா யிற்றே; இதை அழிக்கக் கூடாது' என்று எண்ணவில லே. உலகுக்குத் தீங்கு புரியும் கொடுமையையுடைய அதனே வேலால் எறிந்து அழித்தான். முருகன் கிரவுஞ்சத்தை அழித்த கொற்றத்தையும் குறிஞ்சி நிலத்துககு உரிமை பூண்டிருக்கும் சிறப்பையும் சொல்லிப் போற்றும்படி சொல்கிருர் நக்கீரர். குன்றம் கொன்ற குன்ருக் கொற்றத்து விண்பொரு கெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! (கிரவுஞ்சமலையை அழித்த குறையாக வெற்றிச் சிறப்பையுடைய, வானே முட்டுகின்ற உயர்ந்த மலைகளே யுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரிய தலைவனே!)