பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812 - திருமுருகாற்றுப்படை விளக்கம் குறிஞ்சிக் கிழவன் கிழமை என்பது உரிமை; அதை உடையவன் கிழவன். குறிஞ்சித் திணைக்கு உரிய தலைவகை இருப்பவன் முருகன். "சேயோன் மேய மைவரை உலகமும்' என்பது தொல்காப்பியம். இந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. அகப்பொருள் இலக்கணத்தைக் கூறும் நூல்களில் எல்லாம் முருகனைக் குறிஞ்சிக்குரிய தெய்வம் என்று வரையறுத்துக் கூறியிருக்கிருர்கள் புலவர்கள். நூலே இயற்றியவர்கள் எந்தச் சமயத்தினராயினும் முருக லுக்குள்ள இந்த உரிமையைப் பறிப்பதில்லே, புத்தமித் திரர் என்ற பெளத்தர் -தாம் இயற்றிய வீரசோழியம் என்ற நூலில் குறிஞ்சித்தினேக்குத் தெய்வம் முருகன் என்றே சொல்லுகிருர். அவர் விரும்பியிருந்தால், அதற்குப் புத்தன் தெய்வ என்ற சொல்லியிருக்கலாம், அகத்தியர் சிவபிரானிடம் தமிழ் கேட்டார் என்று நாம் சொல்வோம். பெளத்தராகிய புத்தமித்திரர் அவலோகிதன் என்னும் பெளத்த தெய்வத்தினிடம் கேட்டதாகப் பாடுகிருர், ஆயுங் குணத்தவ லோகிதன் பால்கின் றருந்தமிழ்கேட்டு' எனறு கூறுகிருர். அது போலக் குறிஞ்சி முதலியவற்றுக்கு வெவ்வேறு தெய்வங்களைக் கூறியிருக்கலாம். அவர் அந்தப் பிழையைச் செய்யவில்லை. குறிஞ்சிக் கிழவன் முருகனே என்று இலக்கணம் வகுக்கிருர், புறச்சமயமாகிய சைன மதத்தைச் சேர்ந்தவர் நாற்கவிராச நம்பி என்பவர். அவர் இயற்றிய அகப் பொருள் விளக்கம் என்ற நூல் புலவர்கள் மிகுதியாகப் பயிலும் நூல். அதிலும் சைனராகிய ஆசிரியர் குறிஞ்சிக்கு உரியவன் முருகனென்றே பாடினர். இத்தாலியிலிருந்து வந்த கிறிஸ்துவப் பாதிரியாராகிய வீரமாமுனிவர்