பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 313 தாம் இயற்றிய தொன்னூலிலும் இந்த உரிமையை மாற்றவில்லே. யாரும் மாற்றத் துணி பாத கிழமை முருக லுக்கும் குறிஞ்சிக்கும் அமைந்திருக்கிறது, அருணகிரியார் கூறுவது கிழவன் என்ற சொல்லுக்குப் பழங்காலத்தில் உரி மையையுடையவன் என்றபொருள்தான் இருந்தது.பிற்காலத் தில் முதியவனேயும் கிழவன் என்று வழங்கும் வழக்கம் உண் டாயிற்று, அருணகிரிநாதர் காலத்தில் அந்தப்பொருள் வந்து விட்டது. "கிழவனுய்ப் புக்கு கின்று', 'தொண்டு கிழவ ளிைவன் ஆர்' என்று திருப்புகழில் முதியவன் என்ற பொருளில் அச் சொல்லே ஆளுகிரு.ர். முருகனுடைய திருநாமமாகிய குறிஞ்சிக் கிழவன் என்பதை எண்ணி அருணகிரிநாதர் நயமாக ஒரு பாட்டுப் பாடுகிருர். கந்தர் அலங்காரத்தில், இந்த உலகம் என்ன பைத்தியக்கார உலகமாக இருக்கிறது! முருகன் மாருத இளமை யுடையவன்; குழந்தை, இளங்குருத்துப்போன்ற பச்சிளங்குழந்தை, அவனேக் கிழவன் என்று சொல்கிறதே! அவன் பால் குடிக்கும் பச்சைக் குழந்தை தொட்டிலில் வளரும் பருவக் குழந்தை பாலுக்காக அழும் குழந்தை; இப்படி இருக்க, அவனேக் குறிஞ்சிக் கிழவன் என்று சொல் லலாமா? என்று வேடிக்கையாகப் பாடுகிருர். 'திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஒதும் குவலயமே” என்பது கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படையில் வரும். "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்ற தொடர்