பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 - திருமுருகா ற் றுப்படை விளக்கம் அருணகிரிநாதர் உள்ளத்தில் எழுப்பிய ஒலியே இந்தப் பாட்டு. புலவர் ஏறு முருகன் அறிவுடையவர்களுக்கெல்லாம் தலேவன், புலமையுடையவர்களில் தலைமை பூண்டவன். அகத்திய ரென்னும் பெரும்புலவருக்குத் தமிழை அறிவுறுத்திய மாபெரும் புலவன். அவனே நல்ல மொழிகளால் எல்லோரும். புகழ்கிருர்கள். பலர்புகழ் கன்மொழிப் புலவர் ஏறே! (சாதி, சமயம், இனம், நாடு, மொழி ஆகியவற்ருல் வெவ்வேருக இருக்கும் பலவகையினரும் புகழ்கின்ற நல்ல' மொழிகளுக்கு உரியவனகிய புலவர்களுக்கு ஆண் சிங்கம் போன்றவனே!) . பலரும் புகழ்ந்து சொல்லும் கன்ருகிய சொற்களே யுடைய பரசமயத்திலுள்ளார்க்கு ஏற்றின் தன்மையை யுடையவனே என்று கச்சினர்க்கினியர் உரை எழுதி, "என்றது. கல்வி மதத்தையுடைய யானே போல்வார்க்குச் சிங்க ஏறு போல்வாய் என்றதாம்’ என்று விளக்குவார். “பரசமயத்தில் உள்ளார்க்கு ஏறு போல்வாய்' என்று. சொன்னது, முருகனே ஞானசம்பந்தராக அவதரித்தார். என்ற கொள்கையை எண்ணிப் போலும். ஞானசம்பக் தரைப் பரசமய கோளரி என்று கூறுவர். முருகன் எல்லா மொழியிலும் வல்லவனதலின் பலரும் புகழ்ந்தனர். புலவர் என்பதற்கு ஞானிகள் என்று ஒரு பொருள் உண்டு. ஞானியர்களுக்கெல்லாம் தலைவனகிய ஞானபண்டிதனே என்று பொருள் கொள்வதும் பொருந்தும். தேவர்களுக்கும் புலவர் என்று பெயர் உண்டு. அதனல், "தேவர்களுக்கெல்லாம் ஏறுபோன்ற தலைவனே என்றும்