பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 3 #5 w பொருள் கொள்ளலாம். "சுரலோக சிகாமணியே' என்பது: அநுபூதி, பெரும் பெயர் முருகன் இனி அப்பெருமானுடைய திருநாமமாகிய முருகன் என்பதன் சிறப்பைச் சொல்ல வருகிரு.ர். அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக! மரபு என்பது இலக்கணம். பெறுவதற்கரிய இலக்க ணங்களால் வந்த பெரிய திருநாமமாகிய முருகன் என்னும் திருநாமத்தை உடையவனே! என்பது இதற்குப் பொருள். முருகை உடையவன் முருகன். அந்தத் திருகாமத்தைப் பெறுவதற்குரிய மரபு அல்லது தகுதி யாவருக்கும் இல்லை. அது பெறுவதற்கு அரியது. அதைப் பெற்றவன் முருகன். அவன் திருநாமம் பொருளாலும் சுவையாலும் பயனலும் மிகப் பெரியது; அது பெரும் பெயர். முருகனிடம் உள்ள அனந்த கல்யாண குணங்கள் ஒப்புச் சொல்லுதற்கு இயலாத கிலேயில் உள்ளன. முருகு என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. விகண்டு: களில் அவற்றைக் காணலாம். எல்லாவற்றையும் தொகுத்துக் காட்டும் தமிழ்ப் பேரகராதியில், இளமை, மணம், அழகு. தெய்வத் தன்மை, வெறியாட்டு வேள்வி, திருவிழா, பூத்தட்டு, தேன், கள், எலுமிச்சை, அகில், எழுச்சி. விறகு, காதணிவகை என்ற பொருள்கள் உள்ளன. இவற்றில் தலைமையானவை மணம், தெய்வத்தன்மை, இளமை, அழகு என்பவை. இந்த கான்கையும் குறிப்பாக கக்கீரரே பின்பு திருமுருகாற்றுப்படையில் கூறுகிருர்.