பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 திருமுருகாற்றுப்படை விளக்கம் "மணங்கமழ் தெய்வத்து இளகலம் காட்டி" என்று 290-ஆம் அடியில் சொல்கிருர், மணமும், தெய்வத்தன்மையும், இளமையும், கலமாகிய அழகும் அவன் தன் திருவுரு வத்திலே காட்டுவான் என்று கூறுகிருர். இந்த நான்கு மரபுகளும் கடவுள் திருவுருவங்களில் வேறு யாருக்கும் அண்மயாத வகையில் முருகனிடம் சிறந்து கிற்கின்றன. அழியாத ஞான மணமும், அருளென்னும் தெய்வத்தன்மையும், என்றும் அழியாத இளமையும்,என்றும் மாருத பேரழகும் உடையவன் முருகன். அவன் ஞான ஸ்கந்தன். கருணகூர் முகங்களாறுடைய பேரருளாளன். என்றும் அழியாத இளமைக்காரன். ஆயிரம் கோடி காமர் அழகெலாம் திரண்டு ஒன்ருகி மேவிலுைம் இணேயாகாத வடிவழகன். ஆகவே அவன் இயல்புகள் பிறரால் பெறு வதற்கு அரியன. அத்தகைய முருகு அவனிடம் இருப்ப தல்ை அவன் திருகாமம் வேறு யாருக்கும் பெறற்கு அரிய தாயிற்று. பரிபாடலும். பெரும் பெயர் முருக'. என்று அவனே ப் பாராட்டும். முருகன் என்னும் திருகாமம் பல பொருள்களையும் தன்னுள் அடக்கி நிற்கிறது. ஞானபண்டிதா, அருளாளா, பாலசுப்பிரமணியா, சுந்தரமூர்த்தி, பக்தர்களுக்குத்தேகுைம் இறைவா, வேள்வி காவலா என்று பல திருகாமங்கள் கூறிப் பெறும் பயனே அந்தத் திருநாமம் ஒன்றை ஒ திப் பெறலாம். - அதல்ைதான் அருணகிரிகாதர் அது சொல்லால் ஒன்ருக வின்ருலும் அதைத் திருகாமங்கள் என்று சொல்கிருர். 'மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள்.” (கந்தர் அலங்காரம்)