பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 319 கசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராளl (தன்பால் விரும்பி வந்தவர்களுக்கு அவர் விரும்பி .யதைத் தந்து பிரம்ப நுகரச் செய்யும், பெரிய புகழை உடையவனே!) கசை என்பது விருப்பம். முருகனை அணுகினல் வேறு யாராலும் வழங்க முடியாத பெருஞ் செல்வத்தைப் பெறலாம் என்ற விருப்பத்தோடு அவனே அணுகு கிருர்கள் அன்பர்கள். ஆகையால் அவர்களே கசையுநர் என்ருர். இந்த அடிக்கு, வீட்டைப் பெறவேண்டு மென்று கச்சி வந்தார்க்கு அதனை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதலேயுடையாய் என்று உரை எழுதுவர் கச்சினர்க்கினியர்; 'பேரிசை என்று மாறுக’ என்றும் எழுதுவர். ஆர்த்துதல் ஆர்த்தும் என்பதற்கு ஆரச் செய்யும் என்பது பொருள்: ஆர்தல்-கிறைதல், நுகர்தல்; இங்கே அவ் விரண்டையும் இணைத்துப் பொருள் கொள்ளுதல் சிறப்பு. தன்னை அண்டி வந்தாருக்கு யாதொரு குறைவும் இன்றி விரம்ப வழங்கி அதனை முற்றும் நுகரச் செய்பவன் முருகன், தன்பால் வந்து கேட்டவனுக்குப் பிறரிடம் மறுபடியும் சென்று கை நீட்டாமல் கிறையக் கொடுப்பது வண்மையாளர் இயல்பு. - 'இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள' என்ற குறளின் உரைகளில் ஒன்ருகிய, "அதனைப் பின்னும் பிறன் ஒருவன்பாற் செனறு ∎...õ፴ፓዟAff வகையால் கொடுத்தல்' என்பதை இங்கே கினைத்துப் அபார்க்க. - -