பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 திருமுருகாற்றுப்படை விளக்கம் செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம் பெருமான் முகம்பார்த்த பின்னர்-ஒருநாளும் பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையாற் பாராவாம் காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்” என்ற பழம் பாடலும் இக்கருத்தை உரைப்பது காண்க குறைவிலா கிறைவாக இருக்கும் இறைவன் ஒரு வனே குறைவின்றி கிரம்பக் கொடுப்பவன், மற்றவர்கள் தாங்களே குறையுடையவர்களாதலின் பிறருக்குக் குறை. வின்றிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இராது, ஆதலின் ஆர்த்தும பெருமையை உடையவனகிய முருகனைப் போற்றச் சொல்கிருர் நக்கீரர். - நுகரச் செய்யும் என்பது ஆர்த்தும் என்பதற்கு உரிய மற்ருெரு பொருள், பொருளே வழங்கிலுைம் அந்தப் டொருளினல் வரும் போகத்தைப் பொருளுடையவன் பெறு வான் என்று சொல்வதற்கில்லே. புலவனுக்கு யானேயைக் கொடுத்தால் அவன் அதைக் கொண்டு என்ன செய். வான்? யானையைக் கட்டித் தீனி போடுவது எப்படி? அதனால் பழங்கால வள்ளல்கள் யானையை வழங்கும் போது அந்த நிலைக்கு ஏற்ற செல்வத்தையும் வழங்கு. வார்கள். - - ஒரு புலவனுக்குச் செல்வன் ஒருவன் தேரை ஈந்தான். அதில் எப்படி ஏறுவது என்று அந்தப் புலவனுக்குத் தெரியவில்லை. அவன், "இப்படி ஏறவேண்டும்" என்று. சொல்லிக் கொடுத்தாளும். "ஏறென்று ஏற்றி' என்று கூறுகிருர் புலவர். - பொன்னும் மணியும் பிற பொருளும் இருந்தாலும் அவற்ருல் வரும் இன்பத்தை நுகரும் வாய்ப்பு எல்லோ ருக்கும் கிடைப்பதில்லை, நுகர்வதற்கும் ஒரு புண்ணியம் வேண்டும். -