பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 321 'பொன்னய்ை மணியாய்ை போகம் ஆனய்' என்று அப்பர் சுவாமிகள் பாடுவார். இறைவனே போக மாகவும் இருந்து அருள்செய்கின்ருளும். முருகன் தன்பால் வருகிறவர்களுக்கு கிரம்பக் கொடுப்ப தோடு, அதை அவர்கள் நன்கு நுகரவும் செய்வான். இந்தக் கருத்தை ஆர்த்தும் என்ற சொல் புலப்படுத்து கிறது. | உயர்ந்த செல்வத்தைக் குறைவறக் கொடுத்து அதனை நுகரும்படி செய்யும் வள்ளலுடைய புகழ் சி றியதாகவா இருக்கும்? அதல்ைதான் முருகனே, இசை பேராள’ என்ருர், அலந்தாரைக் காப்பவன் முருகன் கருணேப் பெருங்கடல். துன்புறும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்னும் பேரருளாளன். பிறரால் துன்புற்று வேறு ஒரு துணேயும் இன்றி ஆற்றலழிந்து நிற்கும் அாாதைகளே அருள் கூர்ந்து காட்பாற்றும் பெருமான். தேவர்கள் பலமுடையவர்கள். தம்மை காடின வர்களுக்கு வரம் ஈயும் வண்மை உடையவர்கள். ஆயினும் அசுரேந்திரகிைய குரல்ை அவர்களுடைய ஆற்றல்கள் அழிந்தன. கிர்க்கதியாக கின்ருர்கள். அவர்களே முருகன் காப்பாற்றினன். இவ்வாறு இடுக்கண் அடைந்து கதியற்று வந்தவர்களைக் காக்கும் செயலேப் பல முறை முருகன் ஆற்றி யிருக்கிருன். அவன் அலங்தோர்க்கு அளிப்பவன். அவன் செக்கச் சிவந்த நிறமுடையவன். அதனல் சேய் என்ற திருநாமம் அவனுக்கு வந்தது. அத்தகைய அழகுத் திருமேனியில் மதாணி முதலிய பொன்னணிகளே அணிந்திருக்கிருன், அன்பர்கள் அவனே அலங்கரித்துப் திரு-21