பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 திருமுருகாற்றுப்படை விளக்கம் பார்க்க வேண்டும் என்னும் ஆர்வமுடையவர்கள். அவர் களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க அவன் அணிகலன்களே அணிகிருன். அலங்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்! (துன்புற்று கிர்க்கதியாக வந்தவர்களுக்கு அருள் வழங்கிக் காப்பாற்றும், பொன் அணிகலன்களை அணிந்த, செவ்வண்ண மேனிப் பெருமானே!) கைபுனைந்து இயற்ருத அணிகலன்களேத் தேவரும் கடவுளும் அணிந்திருப்பதாகச் சொல்வது மரபு, "நாவலொடு பெயரிய பொலம்புனே அவிரிழை'யைத் தேவமகளிர் அணிக் திருப்பதாக முதலில் கக்கீரர் சொல்லியிருக்கிருர், அம்பி கையை, 'இழையணி சிறப்பிற் பழையோள்' என்று கூறிய தையும் பார்த்தோம், பரிசிலரைத் தாங்குபவன் இனி முருகனுடைய வீரத்தையும் அதனல் விளையும் கொடைத் திறத்தையும் சொல்ல வருகிருர். வீரமுடையவர்களுடைய தோள் திண்ணியதாக இருக்கும். மார்பு அகன்றிருக்கும்; அதனல் மார்புக்கே அகலம் என்று பெயர் வந்தது. பரந்த மார்பு வீரத்துக்கு அறிகுறி. முருகன் பெரு வீரமும் அகன்ற மார்பும் உடைய வன். எத்தனையோ போர்களில் வெற்றி கண்ட மார்பு அது. . போரில் அஞ்சி ஒதுங்காமல் பகைவர்களின் முன் கின்று மார்பு கிமிர, விழுப்புண் பட்டாலும் தளராமல் பொருதல் வீரர்களுக்கு அழகு நான் என்று மார்தட்டும் பெருமாள்" முருகன். ஆகவே அந்தத் திருமார் பை, மண்டு அமர்க் கடந்த வென்ருடு அகலம்" என்று சிறப்பிக்கின்ருச் ஆசிரியர், வஞ்சியாமல் எதிர் கின்று கொல்வதைக் கடத்தல் என்பர். முருகன் அவ்வாறு போர் புரிகிறவன். -