பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் - 323. இவ்வாறு பகைவரோடு போர் செய்வதனல் முருகன் வெற்றியை அடைகிருன். அந்த வெற்றியினல் கிடைக்கும் பொருள்களை அவன் தன்னே வேண்டி சிற்பவர்களுக்கு வழங்கி விடுகிருன். தனக்கென்று பாதுகாத்து வைத்துக் கொள்வதில்லை. சூரனிடமிருந்து மீட்ட தேவலோகத்தை அவன் இந்திரனுக்கே வழங்கிவிட்டான். வள்ளல்கள் தம்முடைய பெரு வீரத்தால் பெற்ற வற்றைத் தம்மிடம் வந்து இரக்கும் புலவருக்கும் பாணருக் கும் அளித்து விடுவார்கள். முருகன் தன் மார்பின் வீரத்தால் பெற்றவற்றைத் தன்ளை நாடி வரும் பரிசிலருக்கு வழங்கி விடுகிருன். அவன் இத்தகைய செயல்களால் ஓங்கி நிற்கிருன், உருவத்தாலும் உயர்ந்து கெடியவகை இருக் .கிருன். மண்டுஅமர்க் கடந்தகின் வென்றுஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு கெடுவேள்! (மேல் நெருங்கி வருகின்ற போர்களை வஞ்சியாமல் எதிர் கின்று முடித்து கின்னுடைய வென்று அடுகின்ற மார்பிளுல் (வரும் செல்வத்தைக் கொண்டு) பரிசிலர்களைப் பாதுகாக்கும், அழகையுடைய நெடிய வேளே! மண்டுநெருங்கும். கடந்த-வஞ்சியாமல் எதிர்கின்று கொன்ற. வென்று ஆடு-வெற்றி பெற்று அடுதலையுடைய, அகலம்மார்பு. பரிசிலர்-பரிசில் பெறவேண்டும் என்ற எண்ணத் தோடு வரும் இரவலர். தாங்கும்-பாதுகாக்கும். உருஅழகு.) - இவ்வாறு மார்பின் வலிமையால் பெற்ற செல்வத்தைப் பரிசிலருக்கு ஈவதாகச் சொல்வது ஒரு மரபு கொண்கானங் கிழான் என்ற வள்ளலே மோசிகீரனர் என்பவர் புகழும் போது,