பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 . திருமுருகாற்றுப்படை விளக்கம் "இலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டார் அகலம் நோக்கின மலர்ந்தே' (புறநானூறு, 153) என்று பாடுகிரு.ர். 'மண்டை அகலம் கோக்கி மலர்ந்த என்ற கருத்து: கொடுக்கும் பொருள் மார்பின் வலியான் உளதாமாகலின், அகலம் நோக்கின என்றதாகக் கொள்க என்று அதன் பழைய உரையாசிரியர் விளக்குகிரு.ர். போரிலே பெற்ற செல்வத்தைப் பரிசிலருக்கு வழங்கிப். பாதுகாக்கும் பண்பை உடையவன் முருகன். இதல்ை அவன் வீரமும் கொடைத்திறமும் ஒருங்கே புலனுகின்றன. 'மண்டமர் கடந்த வென்ருடு கின் அகலத்துப் பொலம் பூண் சேஎய்' என்று கூட்டி, மிக்குச் செல்கின்ற போர்களே முடித்த வென்றடுகின்ற கினது மார்பிடத்தே பொன்ற்ை. செய்த பேரணிகலங்களே அணிந்த சேய்' என்று பொருளு, ரைப்பர் நச்சிஞர்க்கினியர், உருகெழு என்பதற்கு, பகைவர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்ற என்றும் பொருள் கொள்ளலாம். மிகப் பெரியவன் முருகனே யாவரும் துதிக்கிருர்கள். அவனுடைய பெயர் எங்கும் பரவுகிறது. மிகப் பெரியவர்களெல்லாம் அவனை ஏத்துகிருர்கள். அவன் எல்லோரையும் விடப் பெரியவன் அல்லவா? அவன் பெயர் பெரியது; புகழ் பெரியது; அவனே ஏத்துபவர்களும் பெரியவர்கள். பதவியால் பெரிய பிரமன் முதலியோர் அவனே ஏத்து