பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 325 கிருர்கள். ஆற்றலால் பெரிய இந்திரன் அவனே ஏத்து கிருன். தவத்தால் பெரிய முனிவர்கள் அவனே எத்து கிருர்கள். அருளால் பெரிய சிவபெருமானே ஏத்துகிருன். அழகால் பெரிய மன்மதன் ஏத்துகிருன். கல்வியால் பெரிய அகத்தியரும் பிறரும் எத்துகின்றனர். இப்படிப் பல துறைகளிலும் பெரியவர்கள் ஏத்தும் பெரிய புகழையும் பெயரையும் உடைய கடவுள் முருகன். பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்! (தேவரும் முனிவரும் பிறருமாகிய பெரியவர்கள் துதிக் கின்ற பெரிய திருநாமத்தையுடைய கடவுளேl) - இயவுள் என்பது மிக அரிய சொல். அதற்குத் தலைவன் என்றும் கடவுள் என்றும் பொருள் உரைப்பர். சூர சங்காரன் முருகன் வீரன் என்பதை அடிக்கடி கினைப்பூட்டுகிருர் கக்கீரர். உலகத்திலுள்ள மக்கள் அச்சத்தில் அழுந்தித் துயருறுகிருர்கள். பசிக்கும். பகைக்கும், வறுமைக்கும். பிணிக்கும் அஞ்சி அஞ்சிச் சாகிருர்கள். தமக்குப் பெருந்துணை ஒன்று இருக்கிறது என்ற கினேவு வந்தால் அந்த அச்சம் போகும். வீரம் மிக்க ஒருவனுடைய துணை இருக்கிறது என்பதை உறுதியாக எண்ணி நம்பினல் கம் அச்சம் போய்விடும். அதனால் முருகனுடைய வீரத்தையும், அதல்ை அவன் பெரிய பகைகளே வென்ற தீரத்தையும், அதல்ை மற்றவர்கள் பெற்ற நன்மையையும் பன்முறை வெவ்வேறு வகையில் எடுத்துச் சொல்கிருர் ஆசிரியர். இப்போது குரனே வென்ற வீரத்தை கினேப்பூட்டுகிரு.ர். முன்பும் சொன்னலும் மீட்டும் மீட்டும் வற்புறுத்தினல்தான் கம் உள்ளத்தில் பதியும் என்று கருதிச் சொல்கிருர்,