பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருமுருகாற்றுப்படை விளக்கம். - அந்தணர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். கல்கத்தாவில் சங்கு, அறுக்கும் சக்து என்று ஒரு சந்தே இருக்கிறதாம். நக்கீரர் பாடிய தனி நூல்களாகத் திருமுருகாற்றுப் படையும், நெடுநல்வாடையும் இப்போது கிடைக்கின்றன. 11-ஆம் திருமுறையில் அவருடைய பெயரால் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திரு ஈங்கோய் மலை எழுபது. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பத்து நூல்கள் உள்ளன. திருமுருகாற்றுப் படையையன்றி மற்ற நூல்கள் சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரருடைய வாக்கு அல்ல என்று: ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். நக்கீரர் புராணங்களில் வருகிற புண்ணிய புருஷராக, விளங்குகிறார். திருமுருகாற்றப்படை தோன்றியதற்குக் காரணமாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் மதுரையிலும், காளத்தியிலும், திருப்பரங்குன்றத்திலும் நிகழ்ந்தன. அதில் மதுரைத் திருவிளையாடல் புராணங்களிலும், திருப்பரங்குன்றப் புராணத்திலும், காளத்திப் புராணத்திலும் நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய வரலாறு இடம் பெறுகின்றது. இந்த வரலாற்றில் ஒவ்வொரு புராணத்திலும் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நக்கீரர் சிவபெருமானுடைய சாபத்தைப் பெற்று அதனே நீக்கிக்கொள்ளும் பொருட்டுக் கைலாச யாத்திரை சென்றார் என்றும், இடையில் ஒரு மலைக்குகையில் அடைபட்டு முருகப் பெருமான் மேல் திருமுருகாற்றுப்படை பாடி விடுதலை பெற்றார் என்றும். பின்பு காளத்தி மலை சென்று கைலாச தரிசனம் செய்து சாபத்தினின்றும் விடுதல் பெற்ற