பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 திருமுருகாற்றுப்படை விளக்கம் சூரன் தனக்குள்ள வரம் முதலிய பலத்தினுலும், தன்னுடைய தம்பிமார் தனயன் ஆகியோர் துணை உண் டென்ற மிடுக்கிலுைம், அறுபத்தாறு கோடி அசுரர் படையாக வருகிருர்கள் என்ற செருக்கிலுைம் முருகனை எதிர்த்து வந்தான். முருகன் அவனுடைய செருக்குக்குக் காரணமானவற்றை ஒவ்வொன்ருகக் குலேத்து அழித் தான். பெரிய பரத்தில் முதலில் கிளைகளேயெல்லாம் வெட்டிவிட்டுப் பிற்கு அடிமரத்தை வெட்டுவது போல. அவனுடைய தம்பிமாரையும் படைகளேயும் அழித்துப் பிறகு அவனைக் கொன்ருன். அவனுடைய குலத்தை வேரோடு களைந்தான். அவனுடைய சுற்றத்தார் அனே வரும் அழிந்தனர். அவ்வாறு அழித்த பெரிய வலிமையை உடையவன் முருகள். சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! (குரனது குலத்தை அடியோடு அழித்த மார்பை யுடைய மிக்க வலிமையைப் பெற்றவனே! மருங்கு-குலம். மொய்ம்பு-மார்பு.) இங்கும் வீரத்தின் சிறப்பைப் புலப்படுத்த மார்பைச் சொன்னர். மொய்ம்பு என்பதற்கு வலிமை என்ற பொருளும் உண்டு. போரிலே புக்கு வெல்லும் வீரத்தை மொய்ம்பென்றும், பிற வலிமைகளே மதவலி என்றும் கூறினர் என்றும் கொள்ளலாம். பின் ல்ை வரும் போர் மிகு' என்ற தொடரை முன்னலே கூட்டி, போர்மிகு பொய்ம்பின் சூர்மருங்கு அறுத்த மதவலி' என்று கொண்டு, போர்த் தொழிலிலே மிகுகின்ற மொய்ம்பாலே சூரபன்மாவிள் குலத்தை இல்லையாக்கின மதவலி என்னும் பெயரை உடையாய்” என்று உரை எழுதுவர். கச்சினர்க்கினியர். -