பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகாமங்கள் 327 போர்மிகு பொருநன் இவ்வாறு நிகழும் போர் எதுவாயினும் அதில் மிக்குத் தோன்றும் பெருவீரன் முருகன். வீரனுடைய வலிமை யைப் போரில்தான் பார்க்க முடியும். போர் என்று சொன் ேைல வீரர்களுடைய தோள் பூரிக்குமாம், 'போரென்ன வீங்கு பொருப்பன்ன திரள்கொள் திண்டோள்" - (பூக்கொய் படலம்) என்று கம்பர் கூறுவர். - * இத்தகைய பெருவீரன் தலேவகிைய முருகன். - போர்மிகு பொருக! குரிசில்! (போரிலே சிறந்து விளங்கும் வீரனே தலைவனே! பொருபவன், பொருகன். குரிசில் என்பதற்கு உபகாரி என்றும் பொருள் கொள்ளலாம்.) - - போரை மிகப் பொர வல்லவனே என்பது ஒரு பழைய உரை. பொருநன் என்பதற்கு, உவமிக்கப்படுவாய்' என்று பொருள் எழுதுகிருர் கச்சிஞர்க்கினியர், பொருவப்படு மவன் பொருகன் என வின்றது என்று விளக்குவார், தனக்குப் பிறர் ஒருவர் உவமையாகாது. தான் பிறருக்கு உவமையாகும் பெருமையுடையவன் என்றபடி, அழகுக்கும் வீரத்துக்கும் முருகனே உவமை கூறுவது சான்ருேர் மரபு. - 'முருகொத் தியே முன்னியது முடித்தலின்' - - - (புறநானூறு 56) என்று கினைத்த காரியத்தை நிறைவேற்றும் பெரு வலிமைக்கும்,