பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 திருமுருகாற்றுப்படை விளக்கம் 'முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனே' (பெரியபுராணம்) என்று அழகுக்கும். 'கந்தனை யனையவர் கலைதெரி கழகம்’ (கம்பராமாயணம்) என்று இளமைக்கும் அறிவுக்கும் புலவர்கள் முருகனே உவமையாக எடுத்தாளுவதைக் காணலாம். இவற்றையெல்லாம் எண்ணியே கச்சினர்க்கினியர், உவமிக்கப்படுவாய்' என்று உரை கூறினர். "இவ்வாறு யான் அறிந்த அளவினலே இருபத்தாறு திருநாமங்களேச் சொன்னேன். இவற்ருேடு அவன் பெயர் களும் புகழும் கின்றுவிடவில்லை. இப்போது எனக்குத் தோன்றிய அளவுக்குச் சொன்னேன். இவற்றை ே விடாமல் சொல்லி முருகனைத் துதிப்பாயாக’ என்று கூறுகிருர் நக்கீரர். 'நீ எங்கே அவனைக் கண்டாயோ அங்கே அவன்க் கையால் தொழுது காலில் விழுந்து வணங்கி இந்தத் திருநாமங்களேச் சொல்லி ஏத்துவாயாக!' என்று கூறி. மேலே இன்னது செய்ய வேண்டும் என்று அறி வுறுத்துகிருர், 6T or Lifié) யான்அறி அளவையின் ஏத்தி ஆனது. (என்று பலவகையாக நான் அறிந்த (உனக்குச் சொன்ன) இந்த அளவிலே சொல்ல வேண்டியவற்றை விடாமல் சொல்லித் துதித்து. ஆதுை-கில்லாமல் அமை யாமல்.) 'என்று யான் அறிந்து கினக்குக் கூறிய அளவாலே யுேம் அமையாதே பல பற்றையும் கூறிப் புகழ்ந்து என்பது கச்சினர்க்கினியர் உரை.