பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 திருமுருகாற்றுப்படை விளக்கம் (கின்னே அளந்து அறிவது உலகில் கிலேபெற்ற உயிர் களுக்கு அருமையாதலால் கின்னுடைய திருவடியைத் தரிசனம் செய்ய எண்ணி வந்தேன். உள்ளி-எண்ணி.) "யின் திருவடியைப் பெறவேண்டு மென்று எண்ணி வந்தேன்' என்று கச்சினர்க்கினியர் உரை எழுதுவர். இறைவனுக்கு அப்பிரமேயன் என்பது ஒரு பெயர். காதலுைம் அளக்கப்படாதவன் என்பது பொருள். அளவை களுக்கு அப்பாற்பட்டவன் அவன். ஆதலின் அவனே முற்றும் உணர யாராலும் இயலாது. அதல்ை நமக்கு ஒரு. குறையும் இல்லே. குடத்தில் நீர் எடுக்கச் செல்லும் பெண் ஆறு முழு, வதையும் எடுத்து வருவதில்லை. தான் எடுத்துச் சென்ற குடத்தை கிரப்பிக் கொண்டு வருகிருள். அதுபோல காம் இறைவன் திருவுரு முழுவதையும் காணவேண்டு மென்பதில்லை. அவன் திருவடி தரிசனம் செய்தாலே போதுமானது. அது புறக் கண்ணுல் பார்ப்பவருக்குத் தாமரையாகத் தோன்றிப் பிறகு அகக் கண்ணுல் பார்க்கும் போது ஞானமாகத் தோன்றி இறுதியில் வீடாகவே இருக்கும். 'தொண்டர்கண்டு அண்டிமொண்டுஉண்டிருக்கும் சுத்த ஞானம்என்னும் தண்டையம் புண்டரிகம் தருவாய்' என்று அருணகிரிநாதர் கூறுவர். அடியையே இலட்சியமாக உடைமையால் அன்பர் களுக்கு அடியார் என்ற பெயர் வந்தது. ஒப்பார் இல்லாதவன் பிறகு முருகனைப் பார்த்து. "எம்பெருமானே .. சினக்கு ஒப்பார் யாரேனும் இருந்தால் அவரை அணுகலாம்.