பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் - 331. என்று தோன்றும் நீயோ தனக்கு உவமை இல்லாக வகை இருக்கிருய். நீ ஞானபண்டித சாமி ஞானமே வடிவானவன். கின் ஞானத்துக்கு ஒப்பான ஞானம் வேறு யாரிடத்தில் இருக்கிறது? ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஞானமூர்த்தி நீ ஆதலின் என் குறை இன்ன தென்று நீ அறிந்திருப்பாயே!” என்று சொல்லும்படி சொல்" கிருர் நக்கீரர், - - நின்னெடு புரையுகர் இல்லாப் புலமையோய்! [கின்னேடு ஒப்பார் இல்லாத ஞானமுடையவனே!) இறைவன் முற்றறிவுடையவன். அவனே ஞானம்; ஞானமே அவன். . - "நீயான ஞான விநோதம்' என்பது கந்தர் அலங்காரம். 'ஞானந் தான்உரு வாகிய நாயகன்' என்பது கந்தபுராணம். 'இவ்வாறு நீ அவனுடைய திருநாமங்களைச் சொல்லி, அவனுடைய திருவடி தரிசனத்துக்கு வந்ததாக விண்ணப் பித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கருணை புரிய வந்து விடுவான். நீ எண்ணிக்கொண்டு போனவற்றை: யெல்லாம் சொல்லித் தீர்க்க வேண்டும் என்ற ஆசை உனக்கு இருக்கலாம். ஆனால், அம்மா என்று கதறிய வுடனே ஓடிவந்து அனேக்கும் அன்னேயைப் போன்றவன் அவன். நீ சொல்வதற்கு முன்பே அருள்பாலிக்க வந்து. விடுவான்.' - - எனக் குறித்தது மொழியா அளவையின். (என்று கூறி எண்ணியவை அனைத்தையும் சொல் லாமல் இருக்கும்போதே.1 .