பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:332 திருமுருகாற்றுப்படை விளக்கம் உடன் இருப்போர் செயல் எவ்வளவோ தூரம் கடந்து வந்த பக்தனுக்கு. 'முருகன் எங்கே இருப்பானே, எப்படி இருப்பானே, அவனைக் காண முடியுமோ என்று ஏங்கும் கிலே உண்டா கிறது. அந்த கிலே உண்டாக கியாயம் இல்லை. ஏனென் ருல் முருகனுக்கு அருகில் இருக்கும் ஏவலாளர்கள். அந்த அன்பனுக்கு உதவி செய்ய முந்துகிருர்கள். இவன் கல்லவன்; அருள் புரிய வேண்டும் என்று சொல்வார்க ஆளாம். முருகனேச் சுற்றியுள்ள தொழும்பர்கள் வெவ்வேறு வடிவத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு முருகனுடைய பக்தர்களின் கூட்டம் மேலும் மேலும் வளரவேண்டு மென்று ஆசை. ஆகையால் எந்தப் பக்தன் வருகிருனே என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருப் பார்கள். - - முருகனே முழுவதும் காணுதவன் பக்தன், ஏதோ ஓரிடத்தில், முருகன் இருக்கும் இடம் இது என்ற உணர் வைப் பெறுகிருன், அப்போது அந்த இடத்திலேயே முருகனத் துதித்து விண்ணப்பித்துக் கொள்கிருன், அதைக் கேட்ட முருகனுடைய அடித்தொண்டர்கள். வந்தவனுடைய இயல்பை ஊகித்து அறிந்துகொள்வார்கள்: விழாவெடுக்கும் இடத்தில் முருகன் எழுந்தருளி யிருப்பதை அறிந்து அவனே அணுகி, வந்த பக்தனைப் பற்றிச் சொல் வார்கள். இவன் உன் கருணைக்குப் பாத்திரமானவன்: இரங்கத் தக்கவன்; அதில் சிறிதும் ஐயம் இல்லை. இவன் அறிவு வாய்ந்த புலவன்; உன்னிடம் ஒன்றைப் பெறும் பொருட்டு இங்கே இரவலனுக வந்திருக்கிருன், நீ பெரு வள்ளல், கேட்டவற்றை யெல்லாம் வழங்குபவன் என்பதை அறிந்து உன் புகழை விரும்பி இங்கே வந்திருக்கிருன்: