பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 333. இனிமையான சொற்களைச் சொல்லிக்கொண்டு வந்துள் ளான், நல்ல வார்த்தைகளைக் கூறுகின்ருன். பல பல நல்ல பெயர்களே கன்முகச் சொல்லித் துதிக்கிருன் .. இவனுக்கு அருள் புரிய வேண்டும்' என்று அவர்கள் முருகனிடம் விண்ணப்பித்துக் கொள்வார்கள். குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி, அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமகின் வண்புகழ் கயக்தென இனியவும் கல்லவும் கணிபல ஏத்தி. (நீ எண்ணியதை அறிந்த உடனே, வேறு வேருனா பல வடிவங்களையுடைய குறிய பல ஏவலளார்கள் விழா நிகழ்த்தும் இடத்தில் சிறப்புண்டாகும்படியாகத் தோன்றி, முருகனே கோக்கி, "இவன் இரங்கத்தக்கவன்; அறிவு: வாய்ந்த இரவலன், ஈகையால் வந்த கின் புகழைக் கேட்டு விரும்பி இனியவையும் கல்லவையுமாகிய சொற்களையும் திருநாமங்களையும் கன்ருகப் பலபலவாகக் கூறித் துதித்து வந்தான் பெருமானே' என்று சொல்ல. கூளியர்-ஏவ லாளர். சாறு-விழா. முதுவாய் இரவலன்-அறிவு வாய்ந்த, புலவன்.) "கூளியர் குறித்துத் தோன்றி, அளியன், பெரும, கின் வண்புகழைக் கூற ஈயந்து இனியவும் கல்லவுமாக ஏத்தி வந்தோன் என்று கூறவென முடிக்க' என்பது நச்சிஞர்க்கினியர் காட்டும் முடிவு. கூளியர் என்பதற்குச் சேவித்து நிற்பார் என்று பொருள் கூறுவார் அவர். பெரிய மனிதர்கள் இரங்கக் கூடியவர்களாக இருக் தாலும் அவர்களேச் சார்ந்து சூழ்ந்திருப்பவர்கள் எளிதில்