பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருமுருகாற்றுப்படை விளக்கம் யாரும் அப் பெரிய மனிதர்களே அணுக விடமாட்டார்கள். அதல்ைதான், "சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங் கொடுக்க மாட்டான்' என்ற பழமொழி எழுந்தது. இது பெரும்பான்மையான உலகியல். ஆனல் முருகனுடன் இருக்கும் ஏவலர்களாகிய தொண் டர்கள் அப்படி இல்லே. யார் வந்தாலும் முருகனிடம் அழைத்துச் செல்வார்கள். 'யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற மனப்பாங்குடையவர்கள் அவர்கள். முருகனுடைய அருள் வெள்ளம் வழங்கி வற்றுவ தன்று. எவ்வளவு பேர் வந்தாலும் வரட்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிருர்கள், உடனிருக்கும் ஏவலர் குழாத்தினர். ஆகவே வந்த புலவனேக் கண்டவுடன் முருகனிடம் ஒடிச் சென்று விண்ணப்பித்துக் கொள் கிருர்கள். - அதற்கு மேல் முருகன் தன் திருக்காட்சியைக் காட்ட வருகிருன். - அணுக்கத் தொண்டர்கள் முருகனிடம் இருந்து அவனுடைய குற்றேவல் செய் யும் தொண்டர்களுக்குத் தம் தலேவகிைய முருகனுக்கு உலகு முழுவதுமே அடியாராக வேண்டும் என்ற ஆசை, சக்கரவர்த்தி ஒருவனுடன் இருக்கும் கூட்டத்தினர் உலகம் முழுவதும் தம்முடைய மாமன்னர் செங்கோல் ஒச்சவேண்டுமென்று விரும்புவது இயல்பே. ஆனல் இந்தக் குறும்பல் கூளியரின் விருப்பத்தில் ஒரு வேறுபாடு உண்டு. மாமன்னரைச் சேர்ந்தவர்களுக்குத் தம் மன்னர் ஆண எங்கும் பரவ வேண்டும் என்பதே நோக்கம். இங்கே முருகனுடன் உள்ளவர்களுக்கோ, உயிர்க் .கூட்டங்கள் யாவும் உய்ய வேண்டும் என்ற ஆவல்.