பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 335 முன்னது அதிகார ஆசையின் விளைவு; பின்னது கருணையின் விளைவு. முருகனுடன் இருந்து அணுக்கத் தொண்டு புரியும் பேறு எல்லோருக்கும் கிடைப்பது அன்று. இறைவன் திருவருளே ப பெற்று நுகர்வதில் கான்கு வேறு கிலேகள் உண்டு. அவன் அருட் செங்கோல் நடத்தும் இடத்தில் இருத்தல்; இது சாலோக பதவி, அவனுக்கு அண்மையில் இருந்து தொண்டு புரிதல்; இது சாமீபம். அவனுடைய உருவமே பெற்று விளங்குதல்; இது சாரூபம். அவனுடன் இரண்டறக் கலத்தல்; இது சாயுஜ்ய பதவி. சாயுஜ்யம் என்பதே முத்தி கிலே. ஒரரசனுடைய குடிமகனக இருத்தல், அவனுடைய அரண்மனையில் பணியாளகை இருத்தல், எப்போதும் சிறந்த அணிவகைகளோடு அவன் போகும் இடங்களுக்கு உடன் போய் உடன் உண்டு வாழ்தல், அவ னுடன் ஒன்றிப் பட்டத்தரசியாக இருந்து இன்புறல் என்ற வேறு கிலேகளுக்கு இவற்றை ஒப்பிடலாம். வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்' என்று கக்கீரர் குறிப்பிடும் தொண்டர்கள் முருகனுடைய அணுக்கத் தொண்டர்கள்; சாமீப்ய பதவி பெற்றவர்கள். அவர்கள் வரவர மேல்கிலேயை அடைய கிற்பவர்கள்: சாரூப சாயுஜ்ய பதவி பெறப் போகிறவர்கள். அவர்கள் உயர் பதவியை அடைந்தால் அவர்களுக்கு இப்போது உள்ள பதவியை கிரப்ப ஆட்கள் வேண்டாமா? இனி வரும் அன்பர்கள் அந்த கிலேயை அடைவார்கள். முருகனே அடைந்து பலர் வாழ்ந்து, வரவர மேல் நிலையை அடைய வேண்டுமென்பது இப்போது உள்ள அணுக்கத் தொண்டர்களின் ஆர்வம்.