பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 திருமுருகாற்றுப்படை விளக்கம் வந்தவன் தகுதி அவர்கள் இறைவனிடம் சென்று, வந்த புலவனுடைய தகுதியை எடுத்துச் சொல்கிருர்கள், அவர்கள் எவ்வாறு வந்தவனுடைய தகுதியைச் சொல்கிருர்கள்? எடுத்தவுடன், "இவன் கின் னுடைய அருளுக்கு உரியவன்' என்கிருர்கள் . "அளியன்தானே' என்பதற்கு இரங்குவதற்குரியவன் என்பது பொருள். முருகனுடைய கருணைக்குப் பாத்திரமாக வேண்டுமானல் அவனுக்கு உரிய இலக்கணம் என்ன? கண்ட மாத்திரத்தில் பிறருடைய உள்ளத் தில் இரக்கத்தை உண்டாக்கும் பண்பு இருக்க வேண்டும், இறைவன் திரு. வருளுக்காக ஏங்கி கிற்க வேண்டும். அந்தத் தகுதி இந்தப புலவனிடம் இருக்கிறது. . - அடுத்தபடி அவன் 'முதுவாய் இரவலகை இருக்கிருன். முது என்பது பழுத்த அறிவு; அதைப் பெற்றவன் அவன். தான் பெருக ஒன்றைப் பெறுவதற்காகத் தன் ஏழைமை தோற்றும்படி, தனக்கு இல்லாத பொருளேக் கொடுக்கும். வள்ளலே கோக்கி இரக்கும் பொருட்டு வந்திருக்கிருன். அறிவு வாய்ந்திருத்தல் ஒரு தகுதி, இரவலகை இருத்தல் மற்ருெரு தகுதி. நம் கிலேயையும், காம் அடையவேண்டிய பொருள் இன்னதென்பதையும், அப்பொருள் இன்னரிடம் உள்ளது'என்பதையும், அதனே அடையும் வண்ணம் இன்ன தென்பதையும் அறிந்து கொண்டவனே. அதைப் பெறும் முயற்சியை மேற்கொள்வான். உலகின் இயல்பு, உயிரின் இயல்பு. இறைவன் இயல்பு ஆகியவற்றை கன்கு அறிந்த, வனே. இப்போது உள்ள அவல கிலேயினின்றும் விலகி மேல் கிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற. முடியும், உண்மை இன்னதென்று தெளிவாக அறிந்தவனே மெய்ப்பொருளே அடைவதற்குரிய துறையில் இறங்குவான்.