பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகர்மங்கள் 337 'கற்றிண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி' என்பது குறள். கற்று மெய்ப்பொருள் காண்பதே அறிவு. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்று கூறுவார் திருவள்ளுவர். அந்த மெய்யறிவை உடை யவரே ஈண்டு மீண்டும் வாராத நெறியில் தலைப்படுவார்கள். இங்கே வந்த புலவன் அத்தகைய மெய்யறிவு உடை யவன்; முதுவாய் இரவலன். - புலவர் கூத்தர், பாணர் என்னும் கலைஞர்கள், தம் முடைய திறமையை உணர்ந்து பாராட்டிப் பரிசளிக்கும் வள்ளல்கள் எங்கே இருக்கிருச்கள் என்று தேடிச் சென்று அவர்களே அடைவார்கள். இரவலர் என்று அவர்களேச் சொல்லுவது வழக்கம். அவர்களைப் போலவே இந்தப் புலவனும், இன்பம் எங்கே? அதை வழங்கும் வள்ளல் எங்கே?' என்று தேடி வந்திருக்கிருன்: வள்ளலிடம் பரிசு இரத்து வாழ வங்க புலவனப்போல முருகனிடம் ஒன்றை இரக்க வந்திருக்கிருன். ஆகவே இவனும் இரவலன்தான். மற்றவர்கள் இரக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்த பொருளே இரந்து பெற வேண்டும் என்று வந்தவன் இவன். அருள் என்னும் பொருளுக்கு ஈடாக வேறு ஏதும் இல்லே. அது கிடைத்தால் எல்லாம் பெறலாம். இறைவன் திருவருள் இருந்தால் சிறு துரும்பும் அகிலாண்டங் களையும் படைக்கும் வன்மையைப் பெறும். அதைப் பெறும் பொருட்டு அறிவு வாய்ந்த புலவனுகிய இக்க இரவலன் வக் திருக்கிருன். - திரு-22