பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 s திருமுருகாற்றுப்படை விளக்கம் இவன் தான் புலவன் என்ற மிடுக்கோடு வரவில்லை. புலமை, செருக்கு உண்டாவதற்கும் காரணமாகும். உடல் வலிமையிலுைம் செல்வத்திலுைம் கல்வியிலுைம் செருக்கு உண்டாகும். அவ்வாறு உண்டாகும் செருக்குகளுள் கல்விச் செருக்கு வலிமையுள்ளது. உடல் வலிமை அழிந்தா லும் செல்வம் அழிந்தாலும் அந்த இரண்டினலும் உண் டாகும் செருக்குப் போய்விடும்; அவை விரைவில் அழியத் தக்கவை. ஆனல் கல்வியோ. பிறவி தோறும் தொடர்ந்து வருவது, 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து’’ என்பது திருக்குறள். ஆகவே கல்வியில்ை உண்டாகும் செருக்கு எளிதில் போகாது. காய்க்கு வெறி பிடித்தால் அதை எளிதில் அடித்துக் கொன்று விடலாம். யானைக்கு மதம் பிடித்தால் அதை அடக்குவது எளிதல்லவே! இங்கே வந்துள்ள புலவன் கல்விச் செருக்கு இல்லாமல் பணிவுடன் வந்திருக்கிருன். இரவலகைத் தன் எளிய நிலை புலனுகும்படி வந்திருக்கிருன் உடையார் முன் இல்லார் ஏக்கற்று நிற்பதுபோல் வந்து கிற்கிருன். முருகன் திருவருள் கிடைக்குமோ என்று ஏங்கி வந்திருக்கிருன். 'இனிது சாலவும் ஏசற்ற வர்கட்கே' என்றபடி, அவ்வாறு ஏங்குபவர்களுக்குத்தான் இறைவன் அருள்பாலிப்பான், இந்த ஏக்கம் தோன்றப் புலவன் நிற்ப தல்ை இவனே இரவலன் என்று முருகனுடன் உள்ள அணுக்கத் தொண்டர்கள் கூறுகிருர்கள். இரங்கத்தக்கவன், அறிவு வாய்ந்தவன், செருக்கின்றி நின் அருளுக்காக ஏங்கி நிற்பவன் என்ற கருத்தையெல்லாம் உள்ளடக்கி,