பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் பரிசில் அணுக்கத் தொண்டர்கள், வந்த புலவன் கிலே யையும் தகுதியையும் முருகனிடம் விண்ணப்பித்துக் கொண்டவுடன் அவன் என்ன செய்கிருன்? அவனுடன் உள்ள தொண்டர்களுக்கே இத்தனை அருள் இருக்கும் போது அவனுடைய பேரருளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? அவன் உடனே அருள் புரிய எழுந்தருளு கிருன். தன்னுடைய பொருளை வாங்கிக் கொள்ள யாரேனும் இரவலன் வரமாட்டான என்று எதிர்பார்த்து விற்பது ஈகையாளன் இயல்பு. தன் குழந்தை பால் குடிக்காமையால் பால் கட்டிக்கொண்டு வருந்தும் தாய் அக்குழந்தைக்குப் பாலூட்ட விரைவது போல இறைவன் விரைகிருன். - உயர்நிலை அவன் உலகம் கடந்த பேருருவினன். பேராற்றல் வாய்ந்தவன். எல்லோருக்கும் மேலான தெய்வம் இவன் என்பதை அந்தக் கோலமே காட்டும். அகடித கடன. சக்தியாகிய திறல் விளங்கும் விசுவரூபம் உடைய பெம்மான். வையத்துக்கும் வானத்துக்கும் எட்டாமல் நிமிர்ந்து சிற்பவன். வானம் ஓங்கி ஓங்கி எல்லே காண முடியாமல் செல்கிறது. அவன் திருவுருவமும் அப்படியே உயர்ந்து வாகனத் தோய்ந்து எல்லே காண முடியாமல் விளங்குகிறது. அத்தகையவன் இப்போது தன்னை காடி வந்த புலவனுக்கு அருள் செய்ய வருகிருன். அவனு டைய இயல்பான கிலேயில் அவனே அணுகுவது என்பது இயலாத காரியம். அவன் அடி கிழலே அடைந்து